கனடாவில் வரும் 30-ஆம் திகதி முதல் இந்த தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு அனுமதி! முக்கிய அறிவிப்பு
கனடாவில் வரும் 30-ஆம் திகதி முதல் கோவேக்சின் தடுப்பூசி போட்டவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உலகையே கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தி வருந்து கொண்டிருந்த போது, பல்வேறு நாடுகளில் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
குறிப்பாக இந்தியாவில், ஐதராபாத்தை தலைமையிடமாக வைத்து செயல்படும் பாரத் பயோ டெக் நிறுவனம், கோவாக்சின் என்ற தடுப்பூசியை கண்டுபிடித்தது.
இந்த தடுப்பூசி இந்தியாவில் பெரும்பாலானோருக்கு போடப்பட்டு வருகிறது. ஆனால், கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் அளிக்காமல் இருந்து வந்தது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, கோவாக்சின் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு மட்டும் பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்தது.
இதையடுத்து, கோவாக்சின் தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டவர்கள் தங்கள் நாட்டுக்கு வருவதற்கு பல நாடுகள் அனுமதி அளித்து வருகின்றன. அதன் படி கனடாவிலும் கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
கோவாக்சின் தவிர சீனாவில் உருவாக்கப்பட்ட சினோவாக் மற்றும் சினோபார்ம் ஆகிய 2 தடுப்பூசிகளுக்கும் கனடா அனுமதி அளித்துள்ளது.
அதன்படி கோவாக்சின், சினோவாக் மற்றும் சினோபார்ம் ஆகிய தடுப்பூசிகளை முழுமையாக செலுத்திக் கொண்ட நபர்கள் வரும் 30-ஆம் திகதி முதல் கனடாவில் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.