இடம்பெயர்ந்த மக்களுக்காக கனடா வழங்கும் புதிய வேலைவாய்ப்பு
அகதிகள் மீள்குடியேற்றம் மற்றும் தொழிலாளர் சேர்க்கை ஆகியவற்றில் உலக அளவில் முன்னணியில் உள்ள நாடு கனடா தான்.
திறமையான அகதிகள் மற்றும் இடம்பெயர்ந்தவர்களை கனடாவிற்கு வரவேற்பதன் மூலம், தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக கனடா இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
கனடா அரசாங்கம் புதிய கூட்டாட்சி பாதையை உருவாக்குவதன் மூலம் EMPP ஐ விரிவுபடுத்துகிறது.
இதன் மூலம் எந்த எந்த வெற்றிடங்களை நிரப்ப முற்படுகின்றார்கள்?
செவிலியர் உதவியாளர்கள், தனிப்பட்ட உதவித் தொழிலாளர்கள், நீண்ட கால பராமரிப்பு உதவியாளர்கள், மென்பொருள் பொறியாளர்கள், வலை வடிவமைப்பாளர்கள், இயந்திரவியல் மற்றும் மின் பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள், ஆசிரியர்கள், சுற்றுலா உள்ளிட்ட மற்றும் விருந்தோம்பல் தொழிலாளர்கள், மற்றும் டிரக் மற்றும் டெலிவரி சேவை ஓட்டுநர்கள் என பல்வேறு வேலைகளை நிரப்புவதற்கு வேலை ஆட்களை சேர்க்கின்றனர்.
EMPP என்றால் என்ன?
கனேடிய தொழிலாளர் சமூகத்தின் தேவைகளை ஆதரிப்பதற்காக தற்போதுள்ள பொருளாதார திட்டங்களின் மூலம் திறமையான அகதிகள் கனடாவிற்கு குடிபெயர்வதற்கு உதவும் வகையில் இந்த EMPP திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன் மூலம், கனடாவில் உள்ள அவர்களது குடும்பங்களுடன் தங்கள் வாழ்க்கையை பாதுகாப்பாக வாழ மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்குகின்றது.
அதே நேரத்தில் EMPP சர்வதேச பாதுகாப்பு தேவைப்படும் பிற இடம்பெயர்ந்த மக்களை விண்ணப்பிக்க அனுமதித்துள்ளது.
இதனால் ஏற்படும் நன்மைகள்
இந்த நபர்கள் தங்கள் வாழ்க்கையையும் தொழிலையும் மீண்டும் கட்டியெழுப்பும்போது அவர்கள் நமது தொழிலாளர் சக்தியில் உள்ள இடைவெளிகளை நிரப்பவும் முடியும்.
உள்ளூர் பொருளாதாரங்களுக்கு பங்களிக்கவும், சமூகங்களை வளப்படுத்தவும் உதவுபவராக திகழ்வீர்கள்.