கனடாவில் அதிகரிக்கும் Omicron: 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முக்கிய பரிந்துரை
கனடாவில் இதுவரை மொத்தம் 15 பேருக்கு Omicron தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கனடாவில் புதிய Omicron வகை கொரோனா வைரஸால் மொத்தம் 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளன, மேலும் நாடு முழுவதும் கடுமையான நோய் போக்குகள் மீண்டும் உயரத் தொடங்கும் என்று பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், 50 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெரியவர்களும் இரண்டு டோஸ் தடுப்பூசிகளைப் பெற்று 6 மாதங்களுக்குப் பிறகு பூஸ்டர் தடுப்பூசியை பெற வேண்டும் என்று நோய்த்தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு பரிந்துரைக்கிறது, இதனை ஆதரிப்பதாக கனேடிய அரசு கூறியுள்ளது.
கடந்த வாரம், அமெரிக்காவைத் தவிர அனைத்து நாடுகளிலிருந்தும் விமானம் மூலம் வரும் மக்கள் ஒரு COVID-19 சோதனை எடுக்க வேண்டும் என அறிவித்ததது.
மேலும், 10 தெற்கு ஆப்பிரிக்க நாடுகளை உள்ளடக்கிய பயணிகளுக்கு கனடாவுக்குள் நுழைய தடை அறிவிக்கப்பட்டது.
நேற்று, செய்தியாளர்களிடம் பேசிய கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி தெரசா டாம், நாட்டில் 11 Omicron பாதிப்புகளை அறிவித்தார்.
அவர் பேசிய சில மணிநேரங்களுக்குப் பிறகு, 12 வயதுக்குட்பட்ட ஒரு குழந்தைக்கு Omicron தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக யார்க் நகரம் கூறியது. அந்தக் குழந்தை சமீபத்தில் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை பிற்பகுதியில், ரொறன்ரோவில் மேலும் 3 பேருக்கு Omicron தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்டவர்களில் இருவர் சமீபத்தில் நைஜீரியாவிலிருந்து திரும்பியவர்கள், மற்றொரு நபர் சுவிட்சர்லாந்தில் இருந்து திரும்பியவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கோவிட்-19 சிகிச்சைக்காக ஒரு மில்லியன் டோஸ் வாய்வழி தடுப்பு மருந்தை Pfizer.Inc (PFE.N) உடன் கனடா ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், Merck & Co (MRK.N) உடன் 500,000 ஒப்பந்தம் செய்துள்ளதாக கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்தார்.