கனடாவின் நிலை குறித்து தலைமை பொது சுகாதார அதிகாரி வெளியிட்ட முக்கிய தகவல்
கனடா ஓமிக்ரான் மாறுபாட்டின் மோசமான கட்டத்தை கடந்துவிட்டதாக தலைமை பொது சுகாதார அதிகாரி அறிவித்துள்ளார்.
கனடாவில் கடந்த மாதம் ஓமிக்ரான் மாறுபாடு பரவி தொடங்கியதை அடுத்து கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், தினசரி பாதிப்பு எண்ணிக்கை மற்றும் தொற்று உறுதியாகும் விகிதங்கள் உடப்ட பல குறியிடுகள் இப்போது கனடாவில் ஓமிக்ரான் நோய்த்தொற்றுகள் தேசியளவில் உச்சத்தை எட்டியுள்ளன என்பதை காட்டுவதாக தலைமை பொது சுகாதார அதிகாரி தெரசா டாம் கூறினார்.
எனினும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் கனேடியர்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
தொற்று உச்சமைடைந்தாலும், ஓமிக்ரான் அலையால் நிறைய பேர் பாதிக்கப்படலாம். மேலும், அவர்களில் சிலர் ஓமிக்ரானின் மற்றொரு மாறுபாடான BA.2-வால் பாதிக்கப்படலாம் என டாம் தெரிவித்துள்ளார்.
அதனால்தான் முடிந்தவரை பரவலை தொடர்ந்து கட்டுப்படுத்துவது முக்கியமானது என்று டாம் கூறினார்.