கனடா நாடாளுமன்றத்தை சுற்றிவளைத்து டிரக்குகள் போராட்டம்!
கனடாவில் தடுப்பூசி ஆணைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தை சுற்றிவளைத்து டிரக்குகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோவின் COVID-19 தடுப்பூசி ஆணைகளுக்கு எதிராக, கனடா நாடாளுமன்றத்தின் முன் ஒரு பெரிய போராட்டத்தை நடத்த, தலைநகர் ஒட்டாவாவிற்கு டஜன் கணக்கான லொறி மற்றும் டிரக்குகள் அணிவகுத்து சென்றன.
"Freedom Convoy" என்று அழைக்கப்படும் இந்த டிரக் பேரணி, எல்லை தாண்டி பயணிக்கும் டிரக் ஓட்டுனர்கள் கட்டாயமாக கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்ற கனேடிய அரசாங்கத்தின் கொரோனா தடுப்பூசி ஆணையை எதிர்த்து நடத்தப்படுகிறது.
இது தடுப்பூசிகளைப் பற்றியது மட்டுமல்ல. பொது சுகாதார ஆணையை முற்றிலுமாக நிறுத்துவது பற்றிய போராட்டம் என போராட்டக்காரர்களில் சிலர் கூறுகின்றனர்.
Picture: REUTERS/Patrick Doyle
இதெல்லாம் எங்கே முடிவுக்கு வரப்போகிறது? என்று கொரோனா விதிமுறைகளுக்கு எதிராக சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்ட நிலையில், சில டஜன் கணக்கான டிரக்குகள் பாராளுமன்றத்தின் முன் வரிசையாக நின்று ஹாரன்களை ஊதிக் கொண்டிருந்தன.
பங்கேற்றவர்களில் சிலர் முகக்கவசங்களை அணிந்திருந்தனர், ஆனால் கனடாவில் வெப்பநிலை தற்போது மைனஸ் 21 செல்சியஸில் இருப்பதால் பலர் பலாக்லாவாஸில் இருந்தனர்.
நாள் முடிவில், பேரணியில் சுமார் 2,700 டிரக்குகள் எதிர்பார்க்கப்படுகின்றன என்று மத்திய அரசு வட்டாரம் தெரிவித்துள்ளது.
Picture: REUTERS/Patrick Doyle
Picture: REUTERS/Patrick Doyle