கனடாவுக்கு மன்னர் வேண்டுமா? பெரும்பான்மை கனேடியர்களின் கருத்து
கனடாவுக்கு சார்லஸ் மன்னராக இருக்க வேண்டுமா என்பது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஆய்வு ஒன்றில், மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள்.
மன்னர் வேண்டாம்
ஒருபக்கம் மன்னர் சார்லசுடைய முடிசூட்டுவிழா நெருங்கிக்கொண்டிருக்க, மறுபக்கமோ, சார்லசுடைய ஆட்சியின் கீழிருந்து விலகிக்கொள்ள சில நாடுகளின் மக்கள் விருப்பம் தெரிவித்துவருகிறார்கள்.
Dan Kitwood/Pool/Reuters
அவ்வகையில், சமீபத்தில், Angus Reid Institute என்னும் ஆய்வமைப்பு, சார்லஸ் கனடாவுக்கு மன்னராக இருக்கவேண்டுமா என்பதைக் குறித்து ஒரு ஆய்வு மேற்கொண்டது. ஆய்வு முடிவுகளில், ஆய்வில் பங்கேற்றவர்களில் 60 சதவிகித கனேடியர்கள், சார்லஸ் தங்களுக்கு மன்னராக இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
சதவிகிதம்பேர் மட்டுமே சார்லசுக்கு ஆதரவாக கருத்துக்களைத் தெரிவித்துள்ள நிலையில், 48 சதவிகிதம்பேர் மன்னருக்கு ஆதரவில்லை என்று கூறியுள்ளார்கள்.
Chris Jackson/The Associated Press
கமீலாவின் நிலை இன்னும் மோசம்
ராணி கமீலாவின் நிலையோ இன்னும் மோசமாக உள்ளது. ஆம், மூன்றில் இரண்டு பங்கு கனேடியர்கள் (66 சதவிகிதத்தினர்), தாங்கள் கமீலாவை கனடாவின் ராணியாக ஏற்றுக்கொள்வதற்கே எதிரானவர்கள் என்று கூறியுள்ளார்கள்.
Chris Jackson/Getty Images
60 சதவிகிதத்தினர், கமீலாவை ராணி என்று அழைக்கக்கூடாது என்றும், 19 சதவிகிதத்தினர் அவரை Queen Consort என்றே அழைக்கவேண்டும் என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.