கனடாவில் புதிய எண்ணெய் குழாய் திட்டம் - First Nations சமூகத்தின் கடும் எதிர்ப்பு
கனடாவில் புதிய எண்ணெய் குழாய் திட்டத்திற்கு First Nations சமூகத்தினர் உட்பல பல தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
கனடா பிரதமர் மார்க் கார்னி, அல்பெர்டா மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா வழியாக பிடுமேன் (bitumen) எண்ணெயை ஆசியாவிற்கு கொண்டு செல்லும் புதிய எண்ணெய் குழாய் திட்டத்தை ஆதரிக்கிறார்.
இதற்காக, 53 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள எண்ணெய் டாங்கர் தடையை (tanker ban) நீக்குவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.
பின்னணி
2016-ல், Nathan E Stewart என்ற அமெரிக்க tugboat, பிரிட்டிஷ் கொலம்பியா கடற்கரையில் விபத்துக்குள்ளானது.
இதனால் 1,10,000 லிட்டர் டீசல் கடலில் கசிய, Heiltsuk Nation சமூகத்தின் முதன்மை உணவுத் தளங்கள் பாதிக்கப்பட்டன. இன்று வரை அந்த சமூகத்திற்கு முழுமையான இழப்பீடு வழங்கப்படவில்லை.

எதிர்ப்பு
Heiltsuk Nation தலைவர்கள், “இது எங்கள் சமூகத்திற்கு பெரும் அபாயம்” என்று எச்சரித்துள்ளனர்.
Coastal First Nations எனப்படும் ஒன்பது சமூகங்கள், “இந்த திட்டம் ஒருபோதும் நடக்காது” என்று அறிவித்துள்ளன.
600-க்கும் மேற்பட்ட First Nations தலைவர்கள், டாங்கர் தடையை நீக்கக்கூடாது என்று ஒருமனதாக வாக்களித்துள்ளனர்.
Green Party தலைவர் எலிசபெத் மே, “Haida Gwaii மற்றும் BC வடக்குக் கடற்கரை வழியாக எண்ணெய் டாங்கர் செல்லும் வாய்ப்பு இல்லை” என்று கூறியுள்ளார்.
அபாயம்
Hecate Strait பகுதியில் கடுமையான புயல்கள், ஆபத்தான கடல் சூழல் காரணமாக, பெரிய எண்ணெய் டாங்கர்கள் செல்லுவது மிகவும் ஆபத்தானது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
1989-ல் நடந்த Exxon Valdez விபத்து போன்ற பேரழிவுகள் மீண்டும் நிகழக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
First Nations சமூகங்கள், “எங்கள் கலாச்சாரம், வாழ்வாதாரம், கடல் சூழல் அனைத்தும் ஆபத்தில் உள்ளது. இதை ஒருபோதும் ஏற்க முடியாது” என்று தெரிவித்துள்ளன.
கனடா அரசு, பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு இடையில் கடினமான முடிவை எடுக்க வேண்டிய சூழலில் உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Canada oil pipeline First Nations protest, Mark Carney tanker ban lift controversy, Heiltsuk Nation Nathan E Stewart spill, Coastal First Nations oppose pipeline deal, Exxon Valdez disaster warning Canada BC, Green Party Elizabeth May tanker ban stance, Alberta to Asia oil export pipeline plan, Hecate Strait dangerous tanker routes, British Columbia Indigenous rights oil spill, The Guardian Canada pipeline First Nations news