கைப்பற்றப்பட்ட ரஷ்ய செல்வந்தர்களின் சொத்துக்களை ஒரு நல்ல விடயத்துக்காக பயன்படுத்த கனடா திட்டம்
கைப்பற்றப்பட்ட ரஷ்ய செல்வந்தர்களின் சொத்துக்களை விற்று, அதிலிருந்து கிடைக்கும் தொகையை போரால் பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்களுக்கு இழப்பீடாக வழங்க கனடா திட்டமிட்டுள்ளது.
அதற்காக, சட்டம் ஒன்றை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளில் கனடா இறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார் கனேடிய வெளியுறவு அமைச்சரான Melanie Joly.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைத் தொடர்ந்து, புடினுக்கு நெருக்கமான செல்வந்தர்கள் பலர் மீது பல நாடுகள் தடைகள் விதித்தன, அவற்றுள் கனடாவும் ஒன்று.
அத்துடன், அந்த செல்வந்தர்களின் சொத்துக்கள் பல பறிமுதல் செய்யப்பட்டன.
தற்போது அந்த சொத்துக்களை விற்று உக்ரைன் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ கனடா முடிவு செய்துள்ளது.
அது தொடர்பில் சட்டம் ஒன்றை இயக்குவதற்காக கனேடிய நாடாளுமன்றத்தில் விவாதம் துவங்கியாயிற்று.
இதற்கிடையில், செல்வந்தர்களான ரஷ்யர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட சொத்துக்களின் மதிப்பு பல மில்லியன் கனேடிய டொலர்கள் மதிப்பு பெறும் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Spoke with @SecBlinken to reaffirm ???? cooperation on shared priorities, including support for ?? and NATO cooperation.
— Mélanie Joly (@melaniejoly) April 26, 2022
Together we will continue to impose maximum pressure on the Putin regime and support Ukraine in its fight for liberty.#FriendsPartnersAllies