2023ஆம் ஆண்டில் இலட்சக்கணக்கானோரை வரவேற்க கனடா திட்டம்: புலம்பெயர்தல் திட்டம் வெளியிடப்பட்டது
கனடா 2023 - 2025 ஆம் ஆண்டுகளுக்கான புலம்பெயர்தல் மட்ட திட்டத்தை வெளியிட்டுள்ளது.
1.5 மில்லியன் புதிய புலம்பெயர்ந்தோரை வரவேற்கத் திட்டம்
கனடா, 2023 - 2025 ஆம் ஆண்டுகளுக்காக தனது புலம்பெயர்தல் மட்ட திட்டத்தை வெளியிட்டுள்ள நிலையில், 2025ஆம் ஆண்டு வாக்கில், மொத்தம் 1.5 மில்லியன் புதிய புலம்பெயர்ந்தோரை வரவேற்க அந்நாடு திட்டமிட்டுள்ளது.
புதிய புலம்பெயர்தல் இலக்குகள் வெளியீடு
கனடாவில் கடுமையான பணியாளர் தட்டுப்பாடு நிலவுவரும் நிலையில், பணி வழங்கும் பலர் புலம்பெயர்ந்தோர் பக்கம் தங்கள்கவனத்தைத் திருப்பியுள்ளனர்.
சுகாதாரம், திறன்மிகு வர்த்தகம், உற்பத்தி மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் நிலவும் பணியாளர் தட்டுப்பாட்டை, புலம்பெயர்வோரைக் கொண்டு சந்திக்கும் வகையில் புதிய புலம்பெயர்தல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
அத்திட்டத்தின்படி, வரும் மூன்று ஆண்டுகளில் கீழ்க்கண்ட எண்ணிக்கையிலான புதிய புலம்பெயர்ந்தோர் கனடாவுக்கு வரவேற்கப்பட இருக்கிறார்கள்.
- 2023ஆம் ஆண்டில், 465,000 புதிய புலம்பெயர்ந்தோர்.
- 2024ஆம் ஆண்டில், 485,000 புதிய புலம்பெயர்ந்தோர்
- 2025ஆம் ஆண்டில், 500,000 புதிய புலம்பெயர்ந்தோர் கனடாவுக்கு வரவேற்கப்பட உள்ளார்கள்.
தகுதியுடையோர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.