புற்றுநோயால் இறந்த தாய், மாரடைப்பால் உயிரிழந்த தந்தை: கண்ணீர்விட்ட கனடிய வீரர்
FIFA உலகக்கிண்ணத்தில் கனடாவை வெற்றி பெற வைத்த ஸ்டீபன் யூஸ்டாக்கியோ, தனது பெற்றோரை நினைவுகூர்ந்தபோது கண்ணீர் சிந்தியது வைரலானது.
கனடா அணி வெற்றி
தென் ஆப்பிரிக்க கால்பந்து அணிக்கு எதிரான FIFA உலகக்கிண்ணப் போட்டியில் கனடா அணி வெற்றி பெற்று, Round of 16 சுற்றுக்கு முதல் முறையாக முன்னேறியது.
வெற்றிக்கான ஒற்றை கோலினை ஸ்டீபன் யூஸ்டாக்கியோ (Stephen Eustaquio) அடித்தார். அவர் வெற்றிக் கொண்டாட்டங்களின்போது தனது குடும்பத்தினரை நினைவுகூர்ந்தார்.
ஸ்டீபனின் தாயார் எஸ்மாரால்டா 2023ஆம் ஆண்டில் மூளை புற்றுநோயால் உயிரிழந்தார். அடுத்த ஆண்டிலேயே அவரது தந்தை அர்மாண்டோ மாரடைப்பால் உயிரிழந்தார்.
அனைவருக்காகவும்தான்
இதுகுறித்து ஸ்டீபன் யூஸ்டாக்கியோவிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த யூஸ்டாக்கியோ, "நான் செய்யும் அனைத்தும் என் குடும்பம், என் பெற்றோர், என் காதலி, என் மகள், என் சகோதரன் மற்றும் ஊரில் உள்ள நண்பர்கள் என அவர்கள் அனைவருக்காகவும்தான்" என்றார்.
தனது பெற்றோர் குறித்து பேசும்போது ஸ்டீபன் அழுதது பலரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜெஸ்ஸி மார்ஷ் பேசுகையில், "அவருக்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்; எங்கிருந்தோ அவரது பெற்றோர்கள் இதைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்" என்றார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |