கனேடிய வரலாற்றை உடைத்தெரிந்த ஜஸ்டின் ட்ரூடோ!
கனடாவின் வரலாற்றில் முதல்முறையாக வெள்ளையர் அல்லாத ஒருவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாகிறார்.
கனடாவில் கடந்த 146 ஆண்டுகளில் வெள்ளை இனத்தவர் மட்டுமே கனடாவின் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பு வகித்து வந்துள்ளனர்.
அதை மாற்றி, வெள்ளையர் அல்லாத மஹ்மூத் ஜமால் (Mahmud Jamal) என்பவரை அந்த உயரிய பொறுப்புக்கு நியமித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) கனடாவின் வரலாற்றில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.
ஆப்பிரிக்க நாடான கென்யாவில், தலைநகர் நைரோபியில் 1967-ல் பிறந்தவர் மஹ்மூத் ஜமால். 1969 இல் அவருடைய குடும்பத்தினர் பிரித்தானியாவுக்கு புலம் பெயர்ந்தனர்.
அங்கு தனது பெயர், மதம் அல்லது தோலின் நிறம் காரணமாக கேலி செய்யப்பட்டு மற்றும் துன்புறுத்தபட்டதால், 1981-ல் அவர் குடும்பத்தினரோடு கனடாவில் குடியேறினார்.
மஹ்மூத் ஜமால் 2019-லிருந்து ஒண்டாரியோ மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றினார். குற்றவியல், ஒழுங்குமுறை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளின் மேல்முறையீட்டுக்காக அவர் 35 முறை உச்ச நீதிமன்றத்தில் வாதாடியிருக்கிறார்.
ஒன்பது பேர் கொண்ட கனடிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழுவில் உள்ள ரோசாலி ஆபெல்லா (Rosalie Abella) ஓய்வு பெறுகிறார். ஜூலை முதல் தேதியிலிருந்து அவருடைய இடத்தைத் மஹ்மூத் ஜமால் நிரப்புவார்.