என் கர்ப்ப காலத்தில் கனேடிய பிரதமரின் மனைவி சொன்ன வார்த்தைகள்! தோழி குறித்து மேகன் மெர்க்கல் நெகிழ்ச்சி
மேகன் மெர்க்கலும், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோபி க்ரிகோயரும் தங்கள் நட்பு குறித்து நினைவுக்கூர்ந்து நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளனர்.
மேகன் தொகுத்து வழங்கிய podcastல் கலந்து கொண்டு சமீபத்தில் சோபி பேசினார். அப்போது இருவரும் தாய்மை குறித்தும் தங்கள் நட்பு குறித்தும் பேசினர்.
கடந்த கோடையின் போது சோபி மற்றும் அவர் குழந்தைகள் தன்னுடன் பார்ட்டியில் கலந்து கொண்டது பற்றி மேகன் பேசினார். அப்போது நீச்சல் குளத்தில் எப்படியெல்லாம் குளித்து மகிழ்ந்தோம் என்பதை சொன்னார்.
D.R./revistavanityfair
மேகனும், சோபியும் பல ஆண்டுகளுக்கு முன்னர் முதன் முதலில் கனடிய ஃபேஷன் விருதுகள் நிகழ்ச்சியில் சந்தித்து கொண்டதை நினைவுக்கூர்ந்து கொண்டனர்.
அந்த சமயத்தில் மேகன் ரொறன்ரோவில் வசிக்கும் ஒரு நடிகையாகவே அறியப்பட்டார், ஏனெனில் அப்போது ஹரியுடன் அவருக்கு காதல் ஏற்படவில்லை.
சோபி ஒரு அன்புள்ள தோழி என கூறிய மேகன் தனது கர்ப்ப காலத்தில் அக்கறை கொண்டு பேசி ஊக்கமளிக்கும் வார்த்தைகளை சொன்னார் என கூறினார்.