தாயையும் குழந்தையையும் சுட்ட கனேடியர்: பொலிசார் அதிரடி
Man killed by police after gun incident involving woman and a baby: கனடாவில் பெண்ணொருவரையும் ஒரு குழந்தையையும் சுட்டதாக நபர் ஒருவரை பொலிசார் சுட்டுக் கொன்றுள்ளனர்.
கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில், பெண்ணொருவரையும் ஒரு குழந்தையையும் 36 வயது ஆண் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தாயையும் குழந்தையையும் சுட்ட கனேடியர்
ஞாயிற்றுக்கிழமை காலை, ஆல்பர்ட்டா மாகாண தலைநகரான எட்மண்டனில் அமைந்துள்ள அந்த வீட்டுக்கு பொலிசார் விரைந்த நிலையில், சம்பந்தப்பட்ட நபருடன் பேச்சுவார்த்தை நடத்த அவர்கள் முயன்றுள்ளனர்.

ஆனால், கதவைத் திறந்துகொண்டு கையில் துப்பாக்கியுடன் வெளியே வந்த அந்த நபர் துப்பாக்கியைக் கீழே போட மறுத்துள்ளார்.
ஆகவே, மூன்று பொலிசார் அவரைத் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது.
அந்த நபர் படுகாயமடைந்த நிலையில், அவசர உதவிக்குழுவினர் அவரைக் காப்பாற்ற எடுத்த முயற்சிகள் பலனளிக்காமல் அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதற்கிடையில், அந்த வீட்டுக்குள் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் இருந்த ஒரு பெண்ணையும், காயமடைந்திருந்த ஒரு குழந்தையையும் மீட்ட போலிசார், அவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
கொல்லப்பட்ட அந்த ஆணும், காயமடைந்த அந்தப் பெண்ணும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் என்று கூறியுள்ள பொலிசார், குடும்பச் சண்டையே இந்த பிரச்சினைக்குக் காரணமாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.