கனடாவில் மனநல மருத்துவமனையில் இருந்த இருவர் குறித்து காவல்துறை வெளியிட்ட எச்சரிக்கை
கனடாவில் மனநல மருத்துவமனையில் இருந்து மாயமான இருவர்.
அவர்களை அருகே சென்று அணுக வேண்டாம் என பொலிசார் எச்சரிக்கை.
கனடாவில் மனநல மருத்துவமனையில் இருந்து காணாமல் போன இருவரை பொலிசார் தேடி வருகின்றனர். இதையடுத்து கனடா முழுவதிலும் இருவரையும் தேடுவதற்கான வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Coquitlam நகர பொலிசார் வெளியிட்டுள்ள தகவலின்படி அங்குள்ள தடயவியல் மனநல மருத்துவமனையில் இருந்து இருவர் காணாமல் போயுள்ளனர்.
கடந்த ஞாயிறு அன்று இரவு 7.30 மணியளவில் Eric Sabbadin (21) என்பவர் மாயமான நிலையில் அடுத்த 20 நிமிடங்களில் Michael Gardner (39) என்பவரும் காணாமல் போயிருக்கிறார்.
Coquitlam RCMP
Sabbadin கருப்பு தலைமுடி, பழுப்பு நிற கண்கள் மற்றும் ஐந்து அடி, ஏழு அங்குல உயரம் கொண்டவர் என கூறப்பட்டுள்ளது. அதே போல Gardner குறுகிய பழுப்பு நிற முடி, நீல நிற கண்கள், ஆறு அடி உயரம் கொண்டவர் என விவரிக்கப்படுகிறார்.
இருவரும் ஒன்றாக ஒரே இடத்தில் இருப்பதற்கான எந்தவொரு அறிகுறியும் இல்லை என தெரிவித்துள்ள பொலிசார் அவர்களை யாராவது பார்த்தால் அருகே சென்று அணுக வேண்டாம் எனவும் அதற்கு பதிலாக 911க்கு அழைத்து தகவல் கூறலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.