மார்பில் பச்சை குத்தியிருப்பார்! கனடாவில் தமிழர் ஒருவர் குறித்து முக்கிய தகவல்... ஆபத்தானவர் என எச்சரிக்கை
கனடாவில் கொலை வழக்கில் தேடப்படும் தமிழர்.
அவர் வன்முறையாளர் மற்றும் ஆபத்தானவராகக் கருதப்படுவதாக பொலிசார் எச்சரிக்கை.
கனடாவில் ஆபத்தானவர் என அறிவிக்கப்பட்டு தமிழர் ஒருவரை பொலிசார் தேடி வருகின்றனர்.
ரொறன்ரோவை சேர்ந்த 38 வயதான லியோன் டைரில் என்பவர் கடந்த சனிக்கிழமை அன்று க்ளென் எவரெஸ்ட் ரோடு மற்றும் கிங்ஸ்டன் ரோடு பகுதியில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கிடந்தார்.
சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் அங்கு வந்து லியோனை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி பின்னர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் இரண்டாம் நிலை கொலைக்காக தேடப்பட்டு வரும் சதீஸ்குமார் ரயன் ராஜரத்தினத்திற்கு கனடா முழுவதும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
TPS/HO
அவர் ஆறடி-ஒரு அங்குல உயரம், மெல்லிய உடலமைப்பு, பழுப்பு நிற கண்கள் மற்றும் இருபுறமும் மொட்டையடிக்கப்பட்ட கருமையான கூந்தல் என விவரிக்கப்படுகிறார். அவர் மார்பு மற்றும் தோள்கள் இரண்டிலும் பச்சை குத்தியுள்ளார்.
ராஜரத்தினம் ஆயுதம் ஏந்தியதாக நம்பப்படுவதாகவும் அவர் வன்முறையாளர் மற்றும் ஆபத்தானவராகக் கருதப்படுவதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர். அவர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் தங்களை தொடர்பு கொண்டு அது குறித்து கூறலாம் என பொலிசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Toronto Police Service handout