கனடாவில் முடிவுக்கு வந்த கட்டாய தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் போராட்டம்: ஆனால்...
கனேடிய நாடாளுமன்றத்தைச் சுற்றியுள்ள பெரும்பாலான தெருக்களில் அமைதி நிலவுகிறது...
போராட்டத்தை மட்டும் கைவிடமாடோம் என சூழுறைத்த போராட்டக்காரர்களில் பெரும்பாலானாரை இப்போது அங்கே பார்க்கமுடியவில்லை. கலவரத் தடுப்புப் பொலிசார் அவர்களை துரத்தியடித்துவிட்டார்கள்.
இருந்தாலும், போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டதுபோல் தோன்றினாலும், அதன் தாக்கம் கனேடிய அரசியலில் பல ஆண்டுகளுக்கு எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லை தாண்டிச் செல்லும் ட்ரக் சாரதிகள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி பெற்றிருக்கவேண்டும் என உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து, பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகள் மீது கோபமும், கனடாவில் தடுப்பூசி தொடர்பில் போலியான தகவல்கள் வேறு பரவ, கனேடிய பிரதமருக்கு எதிரான வெறுப்பும் உருவானது.
நாட்டில் அவசர நிலை பிறப்பிக்கப்பட, வெள்ளிக்கிழமை கனடா வரலாற்றிலேயே பெரியதொரு நடவடிக்கையில் இறங்கிய பொலிசார் போராட்டங்களில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ய, அந்த பதற்றம் சனிக்கிழமை வரை நீடித்தது, பொலிசார் சுமார் 170 பேரைக் கைது செய்தனர். அவர்களது வாகனங்கள் அகற்றப்பட்டன. அங்கு நிலவிய அழுத்தத்தைத் தாங்க இயலாமல் போராட்டக்காரர்கள் பலர் அங்கிருந்து அகன்றனர். போராட்டம் ஒரு வழியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
ஆனால், இங்கே நாங்கள் ஒரு விடயத்தைத் தொடங்கியிருக்கிறோம் என்று நான் கருதுகிறேன் என்கிறார் போராட்டக்காரர்களில் ஒருவரான Mark Suitor (33).
இது நாம் நாட்டில் ஒரு பெரிய பிளவை உண்டுபண்ணப்போகிறது என்று கூறும் Mark, இது முடிவு என நான் நம்பவில்லை என்கிறார்.
இதற்கிடையில், Ottawaவில் நிலமை கட்டுக்குள் வந்துவிட்டது போல தோன்றினாலும், போராட்டங்கள் முற்றிலும் முடிந்துவிடவில்லை என்பதைக் காட்டும் புதிய அறிகுறிகள் தோன்றியுள்ளன.
ஆம், மேற்கு கனடாவிலிருது அமெரிக்கா செல்லும் முக்கிய பாதை ஒன்றில் போராட்டக்காரர்களால் போக்குவரத்து ச்ற்று தாமதாமாகியுள்ளதாக சனிக்கிழமை மாலை எச்சரித்த கனேடிய எல்லைப் பாதுகாப்பு ஏஜன்சி, மாற்றுப்பாதை ஒன்றைப் பயன்படுத்துமாறு மக்களை அறிவுறுத்தியதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.