கனேடிய தலைநகரில் துப்பாக்கிகள் புழக்கம்! காவல்துறை எச்சரிக்கை
கனேடிய தலைநகர் ஒட்டாவாவில் துப்பாக்கிகள் கொண்டு வரப்பட்டதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன என நகர காவல்துறை எச்சரித்துள்ளது.
நாட்டிற்குள் நுழையும் டிரக் ஓட்டுநர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்ற கனடா அரசாங்கத்தின் உத்தரவை எதிர்த்து, தலைநகர் ஒட்டாவாவில் கடந்த சில நாட்களாக டிரக் ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசாங்கம் இந்த உத்தரவை ரத்து செய்யப்படும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என போராட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், டிரக் ஓட்டுநர்களின் போராட்டத்தின் ஒரு பகுதியாக தலைநகருக்குள் துப்பாக்கிகள் கொண்டு வரப்பட்டதற்கான அறிகுறிகள் தென்படுவதாக ஒட்டாவா காவல்துறை தலைவர் Peter Sloly தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு சிலர் இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்து நிதியளிப்பதற்கான ஆதாரங்கள் இருப்பாக Peter Sloly கூறினார்.
மேலும், இராணுவத்தை அழைப்பது பெரும் ஆபத்துகளை ஏற்படுத்தும் என காவல்துறைத் தலைவர் தெரிவித்துள்ளார்.