கனடாவில் பூங்காவில் தனியாக இருந்த டீன் ஏஜ் பெண்ணுக்கு நேர்ந்த நிலை! பொலிசார் விடுத்துள்ள எச்சரிக்கை
கனடாவில் உள்ள ஒரு பூங்காவில் 18 வயதுக்கு குறைவான டீன் ஏஜ் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட நபர் தொடர்பில் பொலிசார் எச்சரித்துள்ளனர்.
North Vancouverல் உள்ள Trillium பூங்காவில் உள்ள பாலத்தில் தான் இச்சம்பவம் கடந்த 11ஆம் திகதி நடந்துள்ளது. இது தொடர்பான முழு தகவல்களை பொலிசார் தற்போது வெளியிட்டுள்ளனர்.
அன்றைய தினம் மாலை 5.30 மணியளவில் 18 வயதுக்கு குறைவான டீன் ஏஜ் பெண்ணொருவர் அங்கு வந்த நிலையில் அவரை ஆண் ஒருவர் அணுகியுள்ளார்.
பின்னர் அப்பெண்ணை பிடித்து இழுத்துள்ளார், ஆனால் அவரை எதிர்த்து அப்பெண் போராடிய நிலையில் மர்ம நபர் அங்கிருந்து தப்பியிருக்கிறான். இதில் சம்மந்தப்பட்ட நபர் வயது 40களில் இருக்கும் எனவும் அவர் ஒல்லியான உடல்வாகு கொண்டவர் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சிறிய நாய் ஒன்று அவனுடன் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்தோ அல்லது குற்றவாளி குறித்தோ தகவல் தெரிந்தவர்கள் தங்களிடம் கூறலாம் என பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.