கனடாவில் தபாலில் பாஸ்போர்ட்டை அனுப்பிய புலம்பெயந்தவர்... கிடைத்த நடுநடுங்க வைத்துள்ள செய்தி
கனடாவில் வாழும் இந்தியர் ஒருவர், முத்திரையிடுவதற்காக தனது பாஸ்போர்ட்டை தபாலில் அனுப்பிய நிலையில், கனடா தபால்துறை அவரது பாஸ்போர்ட்டைத் தவறவிட்டதால் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.
ஃபிபின் ஜோசப் (Fibin Joseph), 2019ஆம் ஆண்டு, Cape Breton பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பதற்காக இந்தியாவிலிருந்து Nova Scotiaவுக்கு வந்தார். தற்போது அவர் ஹாலிஃபாக்சில் வசித்துவருகிறார்.
ஜோசப் சென்ற ஆண்டு தன் குடும்பத்தைச் சந்திப்பதற்காக இந்தியா செல்லத் திட்டமிட்ட நிலையில், கொரோனா பரவல் பிரச்சினை காரணமாக அவரது திட்டம் நிறைவேறவில்லை.
ஆகவே, 2020 ஜனவரியில் மீண்டும் இந்தியா செல்வதற்காக அவர் மீண்டும் விமான டிக்கெட் முன்பதிவு செய்தார். தனது பாஸ்போர்ட்டை முத்திரயிடுவதற்காகவும், புதிய கனேடிய தற்காலிக வாழிட விசா பெறுவதற்காகவும் பாஸ்போர்ட்டை கனடா தபால் வாயிலாக Ottawaவுக்கு அனுப்பி வைத்தார் ஜோசப்.
அதே நேரத்தில், பிரித்தானியாவில் வாழும் ஜோசப் பின் சகோதரியும் சகோதரனும், அவரையும் தங்கள் குடும்பத்தினரையும் சந்திப்பதற்காக, இந்தியா புறப்படுகிறார்கள்.
இந்நிலையில் ஜோசப்க்கு எதிர்பாராத அதிர்ச்சியளிக்கும் செய்தி ஒன்று கிடைத்தது. அதாவது, அவர் Ottawaவுக்கு அனுப்பிய பாஸ்போர்ட் முத்திரையிடப்பட்டுத் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், அது அவரது கைக்கு வந்து சேரவில்லை. ஆனால், அதை டெலிவரி செய்துவிட்டதாக தகவல் வந்துள்ளது.
தான் கையெழுத்திட்டால் மட்டுமே அந்த பாஸ்போர்ட்டைப் பெறமுடியும் என்றிருந்த நிலையில், அது யாரிடம் கொடுக்கப்பட்டது. கனடா தபால் துறை தன் கையெழுத்தின்றி தனது பாஸ்போர்ட்டை யாரிடம் கொடுத்தது என கேள்வி எழுப்பும் ஜோசப், அக்கம் பக்கத்திலுள்ள வீடுகளில் எல்லாம் சென்று விசாரித்திருக்கிறார். ஆனால், யாருக்கும் அதைக் குறித்துத் தெரியவில்லை.
இன்னொரு நாட்டில் வாழும் ஒரு புலம்பெயர்ந்தோரின் பாஸ்போர்ட் தவறிப்போனால் எப்படி இருக்கும், நடுநடுங்கிப்போனேன் என்கிறார் ஜோசப்.
ஒருவேளை நாளை யாராவது அவரது பாஸ்போர்ட்டை அவரிடம் கொண்டு கொடுக்கலாம். ஆனால், ஒருவேளை அது தவறியிருந்தால், அவர் தனது பாஸ்போர்ட்டை ரத்து செய்துவிட்டு, கனடா தபால் துறையிடமிருந்து அவர்கள் பாஸ்போர்ட்டைத் தவறவிட்டுவிட்டதாக ஒரு கடிதம் பெற்று, தனது பாஸ்போர்ட் நகலில் அரசு அதிகாரிகளிடமிருந்து கையொப்பம் பெற்று இந்திய அரசிடம் புதிய பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்கவேண்டும்.
அதற்கு அவர் கிட்டத்தட்ட 600 டொலர்கள் செலவு செய்யவேண்டியிருக்கும். மீண்டும் அதை அவர் Ottawaவுக்கு அனுப்பி, முத்திரையிட்டு திரும்ப வாங்குவதற்கு எப்படியும் இரண்டு வாரங்கள் வரை ஆகிவிடும்.
திட்டமிட்டபடி இந்தியாவுக்கு செல்ல முடியாததால் அவர் முன்பதிவு செய்த விமான டிக்கெட் வீணாகிவிடும். அதனால் அவருக்கு 2,058 டொலர்கள் நஷ்டம். நான் சம்பாதிப்பதே மாதம் ஒன்றிற்கு 2,000 டொலர்களுக்கும் குறைவுதான் என்கிறார் ஜோசப். இதில் நஷ்டம் ஒரு புறம் இருக்க, இம்முறையும் அவர் திட்டமிட்ட இந்திய பயணம் ரத்தாகலாம், அல்லது காலதாமதமாகலாம்.
இதற்கிடையில், தாங்கள் ஜோசப்பின் பாஸ்போர்ட்டை முடிந்தவரை கண்டுபிடிக்க முயன்றதாகவும், அது எங்கே இருக்கிறது என தங்களால் கண்டுபிடிக்கமுடியவில்லை என்றும் கனடா தபால் துறை தெரிவித்துள்ளது.