கனடாவில் தேங்கிய 215,000 கடவுச்சீட்டுகள்... மேலும் தாமதமாகலாம் என தகவல்
கனடாவில் ஒரு மாத காலம் நீண்ட அஞ்சல்த்துறை வேலை நிறுத்தம் காரணமாக முடங்கிய கடவுச்சீட்டு விநியோகம் தற்போது மீண்டும் துவங்கியுள்ளது.
215,000 புதிய கடவுச்சீட்டுகள்
இதனால் தற்போது பல ஆயிரம் கடவுச்சீட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டு வந்தாலும், இன்னும் தாமதமாகும் வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெளியான தரவுகளின் அடிப்படையில் வேலை நிறுத்தம் காரணமாக நவம்பர் 8ம் திகதி முதல் குறைந்தபட்சம் 215,000 புதிய கடவுச்சீட்டுகள் மற்றும் கடவுச்சீட்டு தொடர்புடைய அஞ்சல்கள் தேங்கியுள்ளன.
டிசம்பர் 1ம் திகதி வெளியான தரவுகளின் அடிப்படையில் 185,000 புதிய கடவுச்சீட்டுகள் தற்காலிகமாக விநியோகம் செய்யாமல் முடக்கப்பட்டது. ஆனால் டிசம்பர் 17ம் திகதி வேலை நிறுத்தம் முடிவுக்கு வரும்போது கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை 215,000 என உயர்ந்துள்ளது.
தற்போது கடவுச்சீட்டு விநியோகத்திற்கான சேவையை மீண்டும் தொடங்குவதற்கான திட்டத்தில் கனடா அஞ்சலுடன் சேவை கனடாவும் பணியாற்ற உள்ளது. மட்டுமின்றி, நெருக்கடி நிலையை சமாளிக்க, அடுத்த ஆண்டு தொடக்கத்திலும், அஞ்சல் விநியோகம் நீட்டிக்கப்படலாம் என்றே கூறியுள்ளனர்.
மேலும், டிசம்பர் 16, 2024 முதல் எந்தப் புதிய கடவுச்சீட்டு விண்ணப்பங்களும் செயலாக்கப்பட்டு அச்சிடப்பட்டுள்ளன என்றால் வழக்கம் போல் அவர்கள் கோரும் அஞ்சல் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும்.
அவசரமாகப் பயணம் செய்ய
எஞ்சிய கடவுச்சீட்டுகள் ஜனவரி 2025ல் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றே கனடா அஞ்சல் தெரிவித்துள்ளது.
புதிய கடவுச்சீட்டுக்காக இன்னும் காத்திருக்கும் கனேடியர்கள் மற்றும் அவசரமாகப் பயணம் செய்ய வேண்டியவர்கள் கடவுச்சீட்டுத் திட்டத்தைத் தொடர்புகொள்ளவும் அல்லது சேவை கனடா மையத்தைப் பார்வையிடவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கடந்த நவம்பர் 15ல் தொடங்கி, 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஊதிய உயர்வு, சிறந்த ஓய்வூதியம் மற்றும் மேம்படுத்தப்பட்ட சுகாதார நலன்களை கோரி கனேடிய தபால் ஊழியர் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |