கனடாவில் தடைசெய்யப்பட்ட துப்பாக்கிகளை மீட்கும் திட்டம்., Canada Post-க்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம்
கனடாவில் தடைசெய்யப்பட்ட துப்பாக்கிகளை மறு கொள்முதல் செய்யும் திட்டத்தின் மூலம் திருப்பி வாங்கி உரிய முறையில் அழிக்க புதிய ஒழுங்குகள் அறிமுகமாகியுள்ளன.
இதற்கிடையில், Canada Post நிறுவனத்திற்கு இப்போது இந்த துப்பாக்கிகளை சேமித்து, ஏற்றுமதி செய்ய அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
2020-ஆம் ஆண்டு மே மாதத்தில் நோவா ஸ்கோஷியாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 23 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, 1,500-க்கும் மேற்பட்ட மாடல்களின் துப்பாக்கிகள் தடைசெய்யப்பட்டன.
இதனை அடிப்படையாகக் கொண்டு, துப்பாக்கிகளை அரசிடம் இருந்து வாங்கி அழிக்கும் திட்டம் ஒக்டோபர் 16 அன்று வெளியிடப்பட்ட அரசாணையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மறு கொள்முதல் திட்டம் இந்த ஆண்டின் இறுதியில் ஆரம்பமாகும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் டொமினிக் லெப்லாங்க் கூறியுள்ளார்.
முதலில், தடை செய்யப்பட்ட துப்பாக்கிகள் சில்லறை கடைகளிலிருந்து வாங்கப்பட்டு அழிக்கப்படும், பின்னர் 2025-ஆம் ஆண்டில் தனிநபர்களிடமிருந்து மறு கொள்முதல் செய்யப்படும்.
கனடா Criminal Code-படி தடை செய்யப்பட்ட துப்பாக்கிகளை வைத்திருப்பதற்கான தற்காலிக அனுமதி தற்போது 2025 ஒக்டோபர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனினும், பணியாளர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இந்த திட்டத்தில் கனடா போஸ்ட் நிறுவனம் நேரடியாக ஈடுபடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Canada, Canada Post