கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்யவேண்டும்: பெரும்பான்மை மக்கள் கருத்து
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்யவேண்டும் என கனேடியர்களில் மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமானோர் கருதுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகள்
ஆய்வமைப்பான Ipsos நிறுவனம், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆய்வொன்றை நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டது. அந்த ஆய்வில், பெரும்பான்மையினர், அதாவது, 69 சதவிகிதம் மக்கள் அடுத்த தேர்தலுக்கு முன் ட்ரூடோ ராஜினாமா செய்யவேண்டும் என்று தெரிவித்துள்ளார்கள்.
ஆனால், ட்ரூடோ அப்படிச் செய்யமாட்டார் என தாங்கள் நம்புவதாக 63 சதவிகிதம்பேர் தெரிவித்துள்ளனர்.
அடுத்த பிரதமராக யார் வரவேண்டும்?
அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவேண்டும் என எதிர்பார்ப்பதாக 59 சதவிகிதம்பேர் கருதும் நிலையில், யார் அடுத்த பிரதமராக வரவேண்டும் என்றும் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அவர்களில், துணை பிரதமரான கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட், கேபினட் அமைச்சர்களான மெலனி ஜாய், ஃப்ராங்கோயிஸ் ஃபிலிப் ஷாம்பேன், இந்திய வம்சாவளியினரான அனிதா ஆனந்த், மார்க் கார்னீ ஆகியோர் பெயர்களும் அடக்கம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |