வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி அனுமதிகள் எண்ணிக்கையைக் குறைக்க கனடா முடிவு
கனடா அரசு, அடுத்த ஆண்டில் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி அனுமதிகள் எண்ணிக்கையைக் குறைக்க முடிவு செய்துள்ளது.
சர்வதேச மாணவர்கள் தொடர்பில் கனடாவின் முடிவு
கனடா அரசு, சர்வதேச மாணவர்கள் அல்லது சர்வதேச மாணவர்களுக்கு வழங்கப்பட இருக்கும் கல்வி அனுமதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க முடிவு செய்துள்ளது.
கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில், 2026ஆம் ஆண்டில், 408,000 வெளிநாட்டு மாணவர்களுக்கு மட்டுமே கல்வி அனுமதிகள் மட்டுமே வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடயம் என்னவென்றால், இந்த 408,000 அனுமதிகளில், 155,000 மட்டுமே புதிதாக கனடாவுக்கு வரும் சர்வதேச மாணவர்களுக்கு வழங்கப்படும்.
Bloomberg
மீதமுள்ள 253,000 அனுமதிகள், ஏற்கனவே கனடாவிலிருக்கும் மாணவர்களுடைய கல்வி அனுமதிகளை நீட்டிப்பது மற்றும் மீண்டும் கனடாவுக்குத் திரும்பும் மாணவர்களுக்கானது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
2025இல் 437,000 சர்வதேச மாணவர்களுக்கு கல்வி அனுமதி வழங்க இலக்கு நியமிக்கப்பட்டது. 2024இல் 485,000 சர்வதேச மாணவர்களுக்கு கல்வி அனுமதி வழங்க இலக்கு நியமிக்கப்பட்டது.
ஆக, 2026இல், 2025ஐவிட 7 சதவிகிதம் குறைவாகவே சர்வதேச மாணவர்களுக்கு கல்வி அனுமதிகள் வழங்கப்பட உள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |