வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான வன்முறை., கனடாவில் வெடித்த போராட்டம்
வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து கனடாவில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
வங்கதேசத்தில் இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை தொடர்கிறது.
இந்த வன்முறைக்கு எதிராக கனடாவில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 11) ஆயிரக்கணக்கான இந்துக்கள் வீதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டங்களில் இந்துக்கள் மட்டுமின்றி கிறிஸ்தவ மற்றும் யூத சமூகத்தினரும் பங்கேற்றனர்.
கனடாவின் டொராண்டோ நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது, இந்துக்களைப் பாதுகாக்க பங்களாதேஷ் இடைக்கால அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
பங்களாதேஷில் இந்துக்களுக்கு நடந்த வன்முறையைக் கண்டித்து அமெரிக்காவிலும் பிரித்தானியாவில் ஆகஸ்ட் 10 சனிக்கிழமையன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
அமெரிக்காவில் நியூயார்க்கிலும், இங்கிலாந்தில் லண்டனிலும் நூற்றுக்கணக்கான இந்துக்கள் போராட்டம் நடத்தினர்.
இந்துக்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்து நாடாளுமன்ற வளாகம் முன்பு ஏராளமானோர் திரண்டனர்.
'இந்துக்களின் உயிர் முக்கியம்' என்ற கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மனித உரிமை அமைப்புக்களின் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இது தவிர, ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் முன்பு சனிக்கிழமை பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Canada, Thousands protest in Downtown Toronto, violence against Hindus in Bangladesh, Bangladesh violence