கனடாவில் கனமழை: வெள்ளத்தில் தத்தளிக்கு பிரிட்டிஷ் கொலம்பியா., ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்
மேற்கு கனேடிய மாகாணமான பிரிட்டிஷ் கொலம்பியாவில் திங்களன்று கனமழை பெய்ததில், நிலச்சரிவு ஏற்பட்டது.
இதனால் சாலைகள் மற்றும் எண்ணெய் குழாய்கள் மூடப்பட்டன, அதுமட்டுமின்றி ஒரு நகரமே முழுமையாக வெளியேற்றப்பட்டது.
வான்கூவருக்கு வடகிழக்கே சுமார் 200 கிமீ (124 மைல்) தொலைவில் உள்ள மெரிட்டில் வெள்ளம் பெருகி பாலங்களை உடைத்தது. இதனால் அங்கிருந்த கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டது.
அதனைட் தொடர்ந்து, அங்கிருந்த மொத்தம் 7,100 குடிமக்களையும் வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
Ben Nelms/CBC
சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை 200 மிமீ (8 அங்குலம்) மழை பெய்தது. அதாவது, வழக்கமாக ஒரு மாதம் பெய்யும் மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்தது.
மேலும், திங்கள்கிழமையும் மழை தொடர்ந்ததால் வெள்ளம் பெருக்கெடுத்து சாலைகள் 250 மிமீ (10 அங்குலம்) வரை தண்ணீர் மற்றும் சேறுகளால் மூடப்பட்டன.
கனமழை மற்றும் அடுத்தடுத்த மண்சரிவுகளால் பிரிட்டிஷ் கொலம்பியா உட்புறத்தில் உள்ள பல்வேறு நெடுஞ்சாலைகளை பாதித்துள்ளது என்று போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Photo: Reuters
மேலும், புயல் காரணமாக ஆல்பர்ட்டாவிலிருந்து பசிபிக் கடற்கரைக்கு கச்சா எண்ணெயை எடுத்துச்செல்லும் டிரான்ஸ் மவுண்டன் பைப்லைனை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த பைப்லைன் ஒரு நாளைக்கு 300,000 பீப்பாய்கள் கொள்ளளவு கொண்டது.
Agassiz நகருக்கு அருகே இரண்டு மண்சரிவுகளுக்கு இடையில் 80-100 கார்கள் மற்றும் டிரக்குகளில் மணிக்கணக்கில் சிக்கியிருந்த மக்களை மீட்க மீட்புப் பணியாளர்கள் அனுப்பப்பட்டனர்.
பலத்த காற்று மீட்புப்பணி சவாலாக இருக்கும் என்றால் மக்களை விமானம் மூலம் வெளியேற்ற வேண்டியிருக்கும் என்று அதிகாரிகள் கூறினர்.
கிழக்கே சுமார் 29 கிமீ (18 மைல்) தொலைவில், ஹோப் நகருக்கு அருகே சாலையின் சில பகுதிகள் அடித்துச் செல்லப்பட்டன.
Oh your headed to #VancouverBC for a Monday morning delivery? You think you’re going to #PrinceGeorge, or #YEG? ???#BCHWY1 and #BCHwy5 CLOSED pic.twitter.com/CwjvuFdoLU
— BCTrucker (@BCTrucker1) November 15, 2021
வான்கூவருக்கு வெளியே உள்ள அபோட்ஸ்ஃபோர்ட் நகரில், வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் அச்சுறுத்தப்பட்ட பல சுற்றுப்புறங்களில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை காலி செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
பின்னர் இப்பகுதியை சூறாவளி தாக்கும், பெரும்பாலும் மின்சாரம் தடைபடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜூன் பிற்பகுதியில், வெப்பநிலை 500-க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றது மற்றும் ஒரு நகரமீ காட்டுத்தீயால் அழிக்கப்பட்டது. இப்போது, இரண்டாவது முறையாக வானிலை தொடர்பான பேரிடரால் பிரிட்டிஷ் கொலம்பியா பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளது.
Ben Nelms/CBC
Misty Oceanna
Bailee Allen
Courtesy of British Columbia Transportation/via Reuters