உலகின் பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் முதலிடம் பிடித்த கனடா
Canada has placed first in a new ranking of the safest countries for travellers in 2027: 2027ஆம் ஆண்டுக்கான, பயணிகளுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் கனடா முதலிடம் பிடித்துள்ளது.
பயணிகள் பாதுகாப்பு தொடர்பிலான Berkshire Hathaway Travel Protection (BHTP) என்னும் அமைப்பு, ஆண்டுதோறும் பயணிகளுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலை வெளியிட்டுவருகிறது.
இந்நிலையில், 2027ஆம் ஆண்டுக்கான பயணிகளுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் கனடா முதலிடம் பிடித்துள்ளது.
பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் முதலிடம்
விடயம் என்னவென்றால், 2026ஆம் ஆண்டில், நெதர்லாந்து, அவுஸ்திரேலியா, ஆஸ்திரியா மற்றும் ஐஸ்லாந்துக்குக் கீழ், பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருந்தது கனடா.

ஆனால், இப்போது, 2027ஆம் ஆண்டுக்கான பயணிகளுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் கனடா நான்கு இடங்கள் முன்னேறி முதலிடத்துக்கு வந்துள்ளது.
பெண்கள், பயணிகள் மற்றும் நிறம் சார்ந்தவர்ளுக்கான பாதுகாப்பு, வன்முறைக் குற்றச்செயல்களிலிருந்து பாதுகாப்பு, பயங்கரவாதத்திலிருந்து பாதுகாப்பு, போக்குவரத்தின்போது பாதுகாப்பு மற்றும் சுகாதார நவடடிக்கைகள் கிடைத்தல் ஆகிய காரணிகளின் அடிப்படையில் இந்த பாதுகாப்பான நாடுகள் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
உலக நாடுகளுக்கு பயணித்த அமெரிக்கர்களின் கருத்துகள், ஆய்வமைப்புகள் சிலவற்றின் ஆய்வுகள், இவற்றுடன், BHTP அமைப்பின் ஆய்வு முடிவுகளையும் சேர்த்து இந்த பாதுகாப்பான நாடுகள் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
இந்நிலையில், பெண்கள், பயணிகள் மற்றும் நிறம் சார்ந்தவர்கள் பாதுகாப்பு என்னும் விடயத்திலும் கனடா முதலிடம் பிடித்துள்ளது.
அதேபோல, பயணிகளுக்கு பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில், கனடாவின் மொன்றியல் நகரத்துக்கு முதலிடம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
