கனடாவில் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி பெற்றுக்கொண்ட இரண்டாவது நபருக்கு இரத்தக்கட்டிகள்
கனடாவில் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி பெற்றுக்கொண்ட இரண்டாவது நபர் இரத்தக்கட்டிகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக கனேடிய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆல்பர்ட்டாவில் வாழும் அந்த நபருக்கு கடந்த சனிக்கிழமை ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி போடப்பட்டதைத் தொடர்ந்து இரத்தக்கட்டிகள் உருவாகியுள்ளன.
அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும், குணமடைந்து வருவதாகவும் கனேடிய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த செவ்வாயன்று ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி போட்டுக்கொண்ட கியூபெக்கைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்குத்தான் கனடாவில் முதல் முதலாக அபூர்வ வகை இரத்தக்கட்டிகள் கண்டுபிடிகப்பட்டன.
தற்போது ஆல்பர்ட்டாவில் வாழும் ஒருவருக்கு அதே மாதிரியான இரத்தக்கட்டிகள் உருவாகியுள்ளன. என்றாலும், ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியை தொடர்ந்து பயன்படுத்த கனடா முடிவு செய்துள்ளது.
கனடாவில் இதுவரை 1.1 மில்லியன் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருப்பதுடன், 23,500க்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு பலியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.