வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள்
சர்வதேச மாணவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் முடிவொன்றை சமீபத்தில் கனேடிய உணவு வங்கிகள் எடுத்துள்ளன.
ஆம், இனி, கனேடிய குடிமக்களுக்கும், நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்றவர்களுக்கும் மட்டுமே உணவு வழங்குவது என உணவு வங்கிகள் முடிவு செய்துள்ளன.
சிக்கலில் மாணவர்கள்
அதாவது, கனடாவுக்கு கல்வி கற்க வரும் மாணவர்கள், தங்கள் செலவுக்கு போதுமான பணம் வைத்திருக்கவேண்டும் என விதி உள்ளது.
அப்படியிருக்கும் நிலையில், தங்கள் உணவு போன்ற விடயங்களை அவர்களேதானே கவனித்துக்கொள்ளவேண்டும் என்று கேட்கின்றன உணவு வங்கிகள்.
ஆகவே, இனி சர்வதேச மாணவர்களுக்கு உணவளிப்பதில்லை என உணவு வங்கிகள் முடிவு செய்துள்ளன.
என்னிடம் கொஞ்சம் பணம் உள்ளது. ஆனால், இங்கு உணவின் விலை மிக அதிகமாக உள்ளது என்கிறார் ஒரு மாணவர்.
நான் கடன் வாங்கித்தான் கனடாவுக்கு படிக்கவந்தேன். இங்கு விலைவாசியும் அதிகமாக உள்ளது. பகுதி நேர வேலைகள் கிடைப்பதும் இப்போது கடினமாகிவிட்டது என்கிறார் மற்றொரு மாணவர்.
முன்பு உணவுத் தேவைகளுக்காக உணவு வங்கிகளை சார்ந்திருந்த மாணவர்கள் சிலர், இப்போது தாங்கள் சில வேளை உணவைத் தவிர்ப்பதாகக் கூறுகிறார்கள்.
அத்துடன், முன்பு இரண்டு, பகுதி நேர வேலைகள் செய்து செலவுகளை சமாளித்துவந்தோம்.
இப்போது, உள்ளூர் மக்களுக்கு வேலை வேண்டும் என்று வேலை வழங்குவோர் கூறுவதால் வேலைக்கும் சிக்கல் ஏற்பட்டு விட்டது என்கிறார் ஒரு மாணவர்.
இந்நிலையில், கனடா, அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவில் சர்வதேச மாணவர்களுக்கு வேலை இல்லை.
ஆகவே, பெற்றோர் எக்கச்சக்கமாக பணம் செலவு செய்து அங்கெல்லாம் பிள்ளைகளை வேலைக்கு அனுப்பும் முன், ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவெடுங்கள் என தொழிலதிபர் ஒருவர் சமீபத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |