ரொறன்ரோ-டெல்லி இடையே புது நெறிமுறையுடன் மீண்டும் விமான சேவை தொடக்கம்!
கிட்டத்தட்ட 5 மாதங்களுக்குப் பிறகு இந்தியா உடனான நேரடி விமான சேவையை கனடா மீண்டும் தொடங்கியது.
கனடாவின் மிகப்பெரிய விமான சேவையான ஏர் கனடா, ரொறன்ரோ - டெல்லி இடையே இடைவிடாத சேவையை புது நெறிமுறையுடன் மீண்டும் செவ்வாய்க்கிழமை முதல் (செப்டம்பர் 21) தொடங்குகிறது.
இது குறித்து ஏர் கனடா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: உலக சுகாதார அமைப்பால் WHO- அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி பெற்ற பயணிகள், RT-PCR அல்லது விரைவான PCR சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
இந்த குறிப்பிட்ட சோதனைகளில் ஏதேனும் ஒன்றை ஏர் கனடா ஏற்றுக்கொள்ளும், அவற்றை தவிர, இந்தியாவினுள் வேறு எந்த மருத்துவமனையிலும் எடுக்கப்பட்ட வேறு எந்த சோதனையம் ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது.
நீங்கள் வேறு நகரத்திலிருந்து இணைப்பு விமானம் மூலமாக வந்தாலும் இதே நெறிமுறைதான் பின்பற்றப்படும்.
நீங்கள் கனடாவுக்கு புறப்படுவதற்கு 14 முதல் 180 நாட்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட சான்றளிக்கப்பட்ட PCR சோதனை முடிவின் சான்றை வழங்கினால் கூட நீங்கள் பயணிக்க முடியும்.
இவ்வாறு இந்தியாவிலிருந்து வரும் விமானங்களுக்கான சோதனை தேவைகள் குறித்து ஏர் கனடா அதன் அதிகாரப்பூரவ வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளது.
அதேபோல், ஏர் இந்தியா விரைவில் டெல்லி-வான்கூவர் மற்றும் டெல்லி-ரொறன்ரோ இடையிலான நேரடி சேவையை தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் இரண்டாவது கோவிட் அலையின் போது ஏப்ரல் 23, 2021 அன்று இந்தியாவிலிருந்து அனைத்து வணிக மற்றும் தனியார் பயணிகள் விமானங்களை கனடா நிறுத்தியது.
அப்போதிருந்து, இந்தியாவிலிருந்து கனடாவுக்குச் செல்லும் மக்கள் வேறு ஏதேனும் நாடு வழியாகச் செல்வார்கள், அவர்கள் தங்கள் இலக்குக்குச் செல்வதற்கு முன் அந்த போக்குவரத்து நாட்டிலிருந்து ஒரு கோவிட் எதிர்மறை சோதனை அறிக்கையைப் பெற வேண்டியிருந்தது.
அனால், செவ்வாய்க்கிழமை முதல் இந்த மூன்றாவது நாட்டிலிருந்து எதிர்மறையான RT-PCR சோதனை அறிக்கையின் தேவை கைவிடப்படுகிறது.