கனேடிய தூதரக அலுவலகங்களில் பணியாற்றும் இந்தியர்களின் எண்ணிக்கையைக் குறைத்த கனடா
கனடா, இந்தியாவிலுள்ள கனேடிய தூதரக அலுவலகங்களில் பணியாற்றிவந்த இந்திய அலுவலர்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியர்களின் எண்ணிக்கை குறைப்பு
இந்தியாவிலுள்ள கனேடிய தூதரக அலுவலகங்களில் பணியாற்றிவந்த இந்திய அலுவலர்களின் எண்ணிக்கையை கனடா குறைத்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ள நிலையில், அது கடந்த ஆண்டு இந்தியா 41 கனேடிய தூதரக அலுவலர்களை வெளியேற்றியதன் தொடர்ச்சியான நடவடிக்கை என கருதப்படுகிறது.
இந்தியாவிலுள்ள கனேடிய தூதரக அலுவலகங்களில் பணியாற்றும் கனேடியர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால், அதற்கேற்ப இந்திய அலுவலர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக தாங்கள் வருந்துவதாகவும், உயர் ஸ்தானிகராலயத்தில் செய்தித்தொடர்பாளராக பணியாற்றும் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Photo/Agencies
அவர் கூறும்போது, இந்தியாவில் உள்ள எங்கள் உள்ளூர் ஊழியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் சேவைக்கு எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறோம். இருநாடுகளுக்குமிடையிலான நீண்ட கால உறவைத் தொடரும் வகையில், இந்தியாவில் உள்ள கனேடியர்களுக்கு தூதரக ஆதரவு மற்றும் வர்த்தகம் மற்றும் வணிக மேம்பாடு உள்ளிட்ட முக்கிய சேவைகளை கனடா தொடர்ந்து வழங்கும் என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில், எத்தனை ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் என்பது உறுதியாக தெரியாவிட்டாலும், அந்த எண்ணிக்கை 100க்கு கீழ் என உறுதிசெய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |