திருமணம் செய்ய கனடாவில் இருந்து ஆசையாக வந்த இளம்பெண்.. சுட்டுக் கொன்று புதைத்த காதலன்
கனடாவில் இருந்து காதலரை மணந்துகொள்ள வந்த இளம்பெண் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் பணி
இந்திய மாநிலம் ஹரியானாவைச் சேர்ந்த இளம்பெண் நீலம் (23), கனடாவுக்கு பணிக்காக சென்றுள்ளார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவுக்கு திரும்பிய அவரைக் குறித்து அதன் பின்னர் எந்த தகவலும் நீலம் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்படவில்லை.
இதனால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்த நிலையில் கடந்த சூன் மாதம் பொலிஸில் பொலிஸில் புகார் அளித்துள்ளார்.
அதில், தனது காதலன் சுனில் திருமணம் செய்துகொள்ள உறுதியளித்ததால் நீலம் அவரைக் காண சென்றார் என்று கூறப்பட்டுள்ளது.
அதன் பின்னர் கடத்தல் வழக்குப்பதிவு செய்த பொலிஸார், புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்பட்ட நிலையில் வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது.
காதலன் கைது
இந்த நிலையில் நீலத்தின் காதலன் சுனில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், காதலியுடன் ஏற்பட்ட சண்டையில் இருமுறை துப்பாக்கியால் சுட்டு, அவரது உடலை தனது வயலில் சுனில் புதைத்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை பிவானியில் உள்ள இடத்தில் நீலத்தின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.