கனவுகளுடன் கனடாவுக்குச் செல்லும் மக்கள்: இணையம் காட்டும் காட்சிகள் உண்மையா?
பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்காக செல்ல தேர்ந்தெடுக்கும் நாடுகளில் கனடாவும் ஒன்றாக உள்ளது.
ஆனால், இணையம் காட்டும், சுத்தமான காற்று, அமைதியான வாழ்க்கை என்னும் காட்சிகள் உண்மையா?
இந்தியர் ஒருவரின் அனுபவம்
கனடாவில் நிரந்தரமாக வாழ்வதற்காக கனடா சென்ற இந்தியரான ஹர்ஷ் குப்தா, கனடா வாழ்க்கை இணையத்தில் காட்டப்படுவது போல் இல்லை என்கிறார்.

நீங்கள் கனடாவுக்குச் செல்ல விரும்பும் ஒரு இந்தியர் என்றால், ஒரு அனுபவஸ்தன் என்னும் முறையில் நான் உங்களுக்கு சில ஆலோசனைகளைக் கூற விரும்புகிறேன் என்கிறார் குப்தா.
கனடாவுக்குச் செல்ல விரும்புவோரின் முதல் தேவை, ஒரு நல்ல வேலை. ஆனால், பலரும் எதிர்பார்ப்பதுபோல, நல்ல சம்பளத்தில் ஒரு வேலை கிடைப்பது கனடாவில் கடினம் என்கிறார் அவர்.
அடுத்த அதிர்ச்சி, வரிகள் என்று கூறும் குப்தா, தான் தன் தொழில் மூலமாக மாதம் ஒன்றிற்கு 10 லட்ச ரூபாய் சம்பாதித்ததாகவும், ஆனால், 5 லட்ச ரூபாய் வரி செலுத்தியதாகவும் தெரிவிக்கிறார்.

கனடாவின் மருத்துவ அமைப்பு குறித்து பேசும் குப்தா, தான் மருத்துவரை சந்திப்பதற்காக 6 மாதங்கள் காத்திருந்ததாகவும், மருந்துகளும் விலையும் அதிகம் என்றும் கூறுகிறார்.
வானிலை மற்றொரு சவாலான விடயம் என்று கூறும் குப்தா, கனடாவின் நீண்ட கோடை காலம், அன்றாட வாழ்வை பாதித்ததாகவும், வெறும் குளிராக மட்டுமல்ல, அது மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும் இருந்ததாகவும் தெரிவிக்கிறார்.
விலைவாசியும் மிக அதிகம் என்று கூறும் குப்தா, அது மக்களுடைய வாழ்க்கைத்தரத்தையும், கனடா குறித்த பார்வையையும் மாற்றிவிடுவதாகவும் தெரிவிக்கிறார்.
அத்துடன், தன்னைப் பொருத்தவரை, நிரந்தரக் குடியுரிமை பெறுவது கடினமாக இருந்ததாக தெரிவிக்கும் குப்தா, கனடா வாழ்க்கை என்பது எல்லோருக்குமானது அல்ல, உணவு விநியோகம், ட்ரக் சாரதி வேலை, விவசாயம் என ஏதாவது வேலை செய்யத் தயார் என்றால், சமாளித்துக்கொள்ளலாம்.
மற்றபடி கஷ்டம் என்கிறார். ஆக, இணையத்தில் காட்டப்படும் இயற்கைக் காட்சிகளையும், சுத்தமான காற்று, அமைதியான வாழ்க்கை என்னும் விடயங்களையும் நம்பி நீங்கள் கனடாவுக்குச் செல்வீர்களானால், முதல் 4 முதல் 5 மாதங்கள் நன்றாக இருக்கும், அப்புறம் கஷ்டம்தான் என்கிறார் குப்தா!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |