கனடா தேர்தல்: பிரதமர் வேட்பாளரை அவரது தொகுதியிலேயே தோற்கடித்த சாதாரண நபர்
கனடாவில் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில், பிரதமர் வேட்பாளரை அவரது தொகுதியிலேயே தோற்கடித்துள்ளார் ஒருவர்.
முதல் தேர்தலிலேயே...
பிரதமர் வேட்பாளரை அவரது தொகுதியான Carleton தொகுதியிலேயே தோற்கடித்த அந்த சாதாரண நபரின் பெயர் புரூஸ் ஃபேன்ஜாய் (Bruce Fanjoy).
லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட புரூஸ், வீட்டிலிருந்தவண்ணம் தன் பிள்ளைகளைக் கவனித்துக்கொள்ளும் ஒரு தந்தை ஆவார்.
இத்தனைக்கும், இப்போதுதான் புரூஸ் முதல் முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார். இருந்தும், அவர் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவரும், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளருமான Pierre Poilievreயையே தோற்கடித்துவிட்டார்.
4,300 வாக்குகள் வித்தியாசத்தில் Pierre Poilievreஐ தோற்கடித்துள்ளார் புரூஸ்.
பிரச்சாரத்தின்போது புரூஸ் குழுவினரால் கவரப்பட்ட ஒரு சிறு கூட்டம் தன்னார்வலர்கள் பின்னர் பெருங்கூட்டமாகியுள்ளனர்.
சாதாரண உடையில் வீடு வீடாகச் சென்று புரூஸ் வாக்கு சேகரிக்க, Pierreயோ, இது தன் தொகுதிதானே, தான் இந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்தானே என அலட்சியம் காட்டி, தொகுதி பக்கமே வரவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், ட்ரம்ப் கனடாவை மிரட்டத் துவங்க, கனடாவுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை புரிந்துகொண்ட மக்கள், தாங்கள் கூறுவதைக் கவனித்துக் கேட்க தங்கள் வாசலுக்கே வந்த புரூஸ் மீது கவனம் செலுத்தத் துவங்கியுள்ளனர்.
ஆக, புரூஸின் கடின உழைப்புடன் இவை எல்லாம் சேர்ந்து லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட புரூஸுக்கு வெற்றியை வாங்கித் தந்துவிட்டன எனலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |