இந்தியா விவகாரத்தால் இணையத்தில் கேலி கிண்டலுக்கு ஆளாகிவரும் கனடா பிரதமர்
கனேடிய குடிமகன் ஒருவர் கனடாவில் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனேடிய பிரதமர் கூறியதால் மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் சிலர் சீரியஸாக கருத்துக்கள் கூறத்துவங்கிய நிலையில், அவர் இந்தியா தொடர்பான பிரச்சினை குறித்து சம்பந்தமேயில்லாமல் பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதால் இணையத்தில் கடுமையாக கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகி வருகிறார்.
பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தை
கனேடிய குடிமகன் ஒருவர் கனடாவில் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, கனடா இந்திய தூதரக உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் சம்பந்தமேயில்லாத நாடுகளுடன் எல்லாம் இந்தியா குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகிறார்.
முதலில் ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியான Mohamed Bin Zayedஉடன் பேச்சுவார்த்தை நடத்திய ட்ரூடோ, பின்னர் ஜோர்டான் நாட்டின் மன்னரான Abdullah II bin Al-Husseinஉடன் இந்தியா குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
This guy @JustinTrudeau is now a joke...he is a meme...he is an embarrassment. pic.twitter.com/zh9N52Q43y
— sushant sareen (@sushantsareen) October 10, 2023
இணையத்தில் கேலி கிண்டலுக்கு ஆளாகிவரும் கனடா பிரதமர்
இப்படி இந்தியா கனடா பிரச்சினைக்கு சம்பந்தமில்லாத நாடுகளுடன் எல்லாம் ட்ரூடோ பேசி வருவதையடுத்து, இணையத்தில் அவர் கடுமையான கேலி கிண்டலுக்கு ஆளாகி வருகிறார்.
Justin Trudeau's Diary:
— Incognito (@Incognito_qfs) October 11, 2023
On my recent trip to India, I got stranded there for two extra days. I was scared that Indian Govt might be considering me a Khalistani Agent. So, I secretly ordered food from Zomato instead of eating what Modi ji arranged for me.
Later I got a call… pic.twitter.com/PLcGcq2Ocl
ட்ரூடோ குறித்த பல வேடிக்கையான மீம்கள் இணையத்தில் உலா வரத் துவங்கியுள்ளன.
is this true @JustinTrudeau ? pic.twitter.com/IEmjmvW1tI
— Tejinder Pall Singh Bagga (@TajinderBagga) October 10, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |