கடுமையான திட்டத்தை ரத்து செய்த கனேடிய மாகாணம்! வெளியான முக்கிய அறிவிப்பு
கனடாவின் கியூபெக் மாகாணம், தடுப்பூசி போடாதவர்களுக்கு சுகாதார வரி விதிக்கும் திட்டத்தை ரத்து செய்துள்ளது.
கனடாவின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட மாகாணமான கியூபெக், தடுப்பூசியைப் போட மறுக்கும் பெரியவர்களிடமிருந்து குறிப்பிட்ட தொகையை சுகாதார வரியாக வசூலிக்க திட்டமிட்டுள்ளதாக இரண்டு வாரங்களுக்கு முன் அறிவித்தது.
இந்நிலையில், இந்த யோசனை மக்களை மிகவும் பிளவுப்படுத்தும் வகையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ள கியூபெக் மாகாண பிரீமியர் Francois Legault, இந்த திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.
கொரோனா மற்றும் அதை எதிர்த்துப் போராட அறிமுகப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் கியூபெக்கில் ஏற்படுத்தியுள்ள பிளவுகள் குறித்து தான் கவலைப்படுவதாக Legault கூறினார்.
கியூபெக் மக்களை ஒன்றிணைத்து ஒற்றுமையாக இருக்க வைக்க முயற்சிப்பதே எனது பங்கு.
அதனால்தான் நாங்கள் சுகாதார வரி விதிக்கும் திட்டத்தை ரத்து செய்துவிட்டோம். இது கியூபெக் மக்களை பிரிக்கிறது என்பதை நான் புரிந்துகொள்கிறேன் என மாகாண பிரீமியர் Francois Legault தெரிவித்துள்ளார்.