ஒரு குடும்பமே இப்படி இறந்ததை பார்க்க மிகவும் துயரமாக இருக்கிறது! கனடா பிரதமர் ட்ரூடோ வேதனை
கனடாவிலிருந்து அமெரிக்காவிற்குள் நுழைய முயன்ற ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பனியில் உறைந்து இறந்ததை பார்க்க மிகவும் துயரமாக இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வேதனை தெரிவித்துள்ளார்.
கனடாவிலிருந்து அமெரிக்காவிற்குள் நுழைய முயன்ற ஒரே குடும்பத்தைச் சேரந்த ஆண் , பெண், குழந்தை உட்பட 4 பேர் பனியில் உறைந்த உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நான்கு பேர் இறந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் ஒரு அமெரிக்க நபர் மீது மனித கடத்தல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர்.
இற்நத நான்கு பேரும் இந்தியாவை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதாவது, இது முற்றிலும் மனதை பாதித்த சம்பவம்.
கடத்தல்கார்கள் மற்றும் ஒரு சிறப்பான வாழ்க்கையை உருவாக்குவதற்கான அவர்களின் விருப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டவர்களால் பாதிக்கப்பட்டு ஒரு குடும்பமே இப்படி இறந்ததை பார்க்க மிகவும் துயரமாக இருக்கிறது.
இதனால்தான் மக்கள் ஒழுங்கற்ற அல்லது சட்டவிரோதமான முறையில் எல்லையைத் தாண்டுவதைத் தடுக்க எங்களால் முடிந்த அனைத்தை நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறோம்.
கடத்தல் மற்றும் முடியாத அபாயமான செயல்களில் ஈடுபட மக்களுக்கு உதவுவதை நிறுத்துவதற்கும் கனடா அமெரிக்காவுடன் மிக நெருக்கமாகப் பணியாற்றி வருகிறது என ட்ரூடோ தெரிவித்துள்ளார்.