கனடாவில் வேலையின்மை வீதம் கடுமையாக உயர்வு
கனடாவின் வேலையின்மை வீதம் ஏப்ரல் மாதத்தில் 6.9 சதவிகிதமாக உயர்ந்துள்ளது என்று தேசிய புள்ளிவிவர அமைப்பான Statistics Canada தெரிவித்துள்ளது.
மார்ச் மாதத்தில் 0.1 சதவிகிதமாக உயர்ந்த நிலையில், ஏப்ரலில் மேலும் 0.2 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
இந்த உயர்வால், வேலைவாய்ப்பு வீதம் 2024 நவம்பரில் இருந்த நிலைக்கு திரும்பியுள்ளது.
இது, 2020 மற்றும் 2021-ல் ஏற்பட்ட கோவிட் பாண்டமிக் ஆண்டுகளை தவிர்த்தால், 2017 ஜனவரிக்குப் பின் கனடா கண்டுள்ள அதிக வேலையின்மை ஆகும்.
ஏப்ரல் மாதத்தில் வேலை தேடியவர்கள் கடந்த ஆண்டு இதே காலத்தைவிட அதிக சிரமங்களை சந்தித்தனர்.
மார்ச் மாதத்தில் வேலை இல்லாதவர்களில் 61 சதவிகிதம் ஏப்ரலிலும் வேலைவாய்ப்பு பெற முடியாமல் இருந்தனர். இது கடந்த ஆண்டைவிட அதிகம் என Statistics Canada தெரிவித்துள்ளது.
ஏப்ரலில் மொத்த வேலை வாய்ப்பு பெரிதாக மாற்றம் இல்லாமல் இருந்தது. வேலைவாய்ப்பு வீதம் 0.1 சதவிகிதம் குறைந்து 60.8 சதவிகிதமாக இருந்தது.
15 முதல் 69 வயதுடைய ஊழியர்களில் 13.2 சதவிகிதம், எதிர்வரும் 6 மாதங்களில் தங்கள் நிறுவனத்தில் பணியாளர்களின் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்த்துள்ளனர். அமெரிக்கா சார்ந்த ஏற்றுமதித் தொழில்களில் பணியாற்றும் ஊழியர்களில் இந்த எண்ணிக்கை 18.6 சதவிகிதமாக இருந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |