கனடாவில் நிரந்தர குடியுரிமை பெறும் இந்தியர்களின் எண்ணிக்கையில் இந்தாண்டு புதிய உச்சம்! முக்கிய தகவல்
கனடாவுக்கு வந்து நிரந்திர குடியுரிமை பெறும் இந்தியர்களின் எண்ணிக்கை இந்தாண்டு இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை தொடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2019ல் 84,114 இந்தியர்கள் கனடாவுக்கு குடிபெயர்ந்த நிலையில் இந்தாண்டு எண்ணிக்கை அதை தாண்டும் என தெரியவந்துள்ளது.
அதன்படி இந்த ஆண்டு ஆகஸ்ட் இறுதிக்குள் 69,014 இந்தியர்கள் கனடாவில் நிரந்தரக் குடியுரிமை பெற்றுள்ளனர். அப்படி பார்த்தால் இந்த ஆண்டு முடிவுக்குள் அது நிச்சயம் 2019 எண்ணிக்கையை தாண்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு மே மாதம் முதல் கனடாவில் இருப்பவர்களுக்கு நிரந்தர வதிவிடத்திற்கான பாதையை திறக்க அரசாங்கம் அதிக அழுத்தம் கொடுத்து வருகிறது.
அதை செயல்படுத்த Immigration Refugees and Citizenship Canada (IRCC), சுகாதாரத் துறையில் தற்காலிகப் பணியாளர்களுக்கான 20,000 விண்ணப்பங்களும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிற அத்தியாவசியத் தொழில்களில் தற்காலிகப் பணியாளர்களுக்கான 30,000 விண்ணப்பங்களும், கனேடிய நிறுவனத்தில் பட்டம் பெற்ற சர்வதேச மாணவர்களுக்கான 40,000 விண்ணப்பங்களும் ஏற்கப்படும் என தெரிவித்தது.
2021 எண்ணிக்கையனது சமீபத்திய ஆண்டுகளில் கனடாவிற்கு இந்தியர்களின் பெருகிவரும் குடியேற்றத்தின் போக்கை காட்டுகின்றன.
2019 இல் வழங்கப்பட்ட மொத்த நிரந்தர வதிவிடங்களில் நான்கில் ஒரு பங்கு இந்தியாவில் இருந்து குடியேறியவர்கள் தான் என்பது முக்கிய விடயமாகும்.