148 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் கனடா அணி படைத்த தேவையில்லாத சாதனை
148 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் கனடா அணி தேவையில்லாத சாதனையொன்றை பதிவு செய்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 31) நடைபெற்ற ICC Cricket World Cup League 2 போட்டியில், கனடா மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதின.
இந்த போட்டியில் கனடா அணி சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் 148 ஆண்டுகள் இல்லாத ஒரு எதிர்மறையான சாதனையை பதிவு செய்துள்ளது.
முதலில் துடுப்பாடிய கனடா அணியின் இரு தொடக்க வீரர்களான அலி நதீம் (Ali Nadeem ) மற்றும் யுவராஜ் சர்மா (Yuvraj Samra), முதல் இரண்டு பந்துகளில் டக் அவுட்டாகி வெளியேறினர்.
இது சர்வதேச கிரிக்கெட்டில் எந்த வடிவத்திலும் இதுவரை நிகழாத அபூர்வ சம்பவமாகும்.
ஸ்காட்லாந்து அணியின் இடது கை வேகப்பந்துவீச்சாளர் பிராட் கர்ரி (Brad Currie), முதல் பந்திலேயே அலி நதீமை சிப் பக்கத்தில் பிடிக்கப்பட்ட கேட்ச் மூலம் வெளியேற்றினார்.
இரண்டாவது பந்தில் பகரத் சிங் நேராக பந்தை பந்துவீச்சாளரிடம் அடித்தார். கர்ரி அந்த பந்தை ஸ்டம்ப்பிற்கு திசைமாற்றினார்.
அந்த நேரத்தில், நான்ஸ்ட்ரைக்கர் பக்கத்தில் யுவராஜ் சர்மா கிரீஸை விட்டு வெளியேறியதால், பந்து ஸ்டம்ப் மீது அடித்து அவர் ரன் அவுட்டானார். அவர் ஒரு பந்தும் எதிர்கொள்ளாமல் வெளியேறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Canada cricket record 2025, ICC League 2 Canada vs Scotland, first ball duck both openers, international cricket rare record, Brad Currie wickets Canada, Yuvraj Samra run out no ball, Ali Nadeem first ball dismissal, Canada cricket team