அமெரிக்கா - கனடா உறவில் வரலாற்று திருப்பம்! பிரதமர் மார்க் கார்னி விலகல் அறிவிப்பு
அமெரிக்காவுடனான உறவில் இருந்து விலகுவதாக கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள மார்க் கார்னி அறிவித்துள்ளார்.
அமெரிக்காவுடனான உறவில் இருந்து விலகல்
அமெரிக்காவுடனான நீண்ட கால பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவில் இருந்து கனடா விலகுவதாக அந்நாட்டின் பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.
வர்த்தக பதட்டங்கள் அதிகரித்துள்ளதை காரணம் காட்டி பிரதமர் மார்க் கார்னி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள வரிகளுக்கு பதிலளிக்கும் விதமாக கனடா தனது பொருளாதாரத்தை "அடிப்படை மாற்றத்திற்கு உட்படுத்த வேண்டியதன்" அவசியத்தை கார்னி வலியுறுத்தினார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்த வர்த்தக வரிகளே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படும் நிலையில், இந்த அறிவிப்பு சர்வதேச வர்த்தகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரலாற்று ஒப்பந்தம் முடிவு
அமெரிக்காவின் 25% வாகன இறக்குமதி வரிக்கு பதிலடியாக, அமெரிக்க பொருட்களுக்கு "அதிகபட்ச தாக்கத்தை" ஏற்படுத்தும் விதமாக கனடா பதிலடி வரி விதிக்க திட்டமிட்டுள்ளது.
அத்துடன் 965 ஆம் ஆண்டு போடப்பட்ட கனடா-அமெரிக்க வாகன உற்பத்தி ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளதாக கார்னி ஆங்கில மற்றும் பிரெஞ்சு பத்தியாளர்களிடம் அறிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |