கனடாவில் வீட்டில் இருந்த பாம்பு எங்கே போனது? அச்சப்படும் உரிமையாளர்... தேடும் காவல்துறை
கனடாவில் வீட்டில் இருந்து மாயமான பாம்பு.
புகைப்படத்தை வெளியிட்டு தேடும் பொலிசார்.
கனடாவில் வீட்டில் இருந்து காணாமல் போன மலைப்பாம்பை பொலிசார் தேடி வருகின்றனர்.
பிரிட்டீஷ் கொலம்பியாவின் Oak Bay பொலிசார் வெளியிட்ட தகவலின்படி, ball python என்ற மலைப்பாம்பு காணவில்லை என அதை வளர்த்து வந்த உரிமையாளர் புகார் கொடுத்திருக்கிறார்.
அந்த பாம்பு கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த நிலையில் மாயமாகியுள்ளது. குறித்த பாம்பு துண்டாகியோ அல்லது குளிர்ந்த வெப்பநிலை காரணமாகவோ இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
Owner of 3ft ball python, who resides in 2000 block of Oak Bay Ave reported his snake missing from its secure glass enclosure. Home/area has been searched Neighbours & animal control advised. Owner fears snake slithered off & died due to cool temperatures. Contact OBPD if found. pic.twitter.com/SZG1ziDjPW
— Oak Bay Police (@OakBayPolice) October 11, 2022
பாம்பின் எடை 2ல் இருந்து 3 பவுண்ட்கள் வரை இருக்கலாம் எனவும் கடைசியாக 7ஆம் திகதி காணப்பட்டது எனவும் கூறப்பட்டுள்ளது.
இவ்வகை பாம்புகள் விஷத்தன்மை கொண்டது கிடையாது எனவும் இது தொடர்பில் யாருக்கேனும் தகவல் தெரிந்தால் விலங்கு கட்டுப்பாடு அல்லது காவல்துறையைத் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.