கனடாவை நடுங்க வைத்த கொலைகாரன் சிக்கினான்: நான்கு நாள் போராட்டம் வெற்றி
அவசர எச்சரிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை
படுகொலைக்கு காரணமான முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு
கனடாவின் Saskatchewan பிராந்தியத்தில் 11 பேர் படுகொலைக்கு காரணமான முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு அறிவித்துள்ளது.
Saskatchewan பிராந்தியத்தில் Rosthern பகுதியில் மறைந்திருந்த மயில்ஸ் சாண்டர்சன் சிக்கியுள்ளதாகவும், உள்ளூர் நேரப்படி சுமார் 3.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
@getty
ஞாயிற்றுக்கிழமை காலை முதல் பிராந்தியத்தில் அமுலில் இருக்கும் பொதுமக்களுக்கான அவசர எச்சரிக்கையின் ஒருபகுதியாக குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அவசர எச்சரிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை எனவும் இதனால் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை பிற்பகல் ஒருவர் கத்தியுடன் வாக்கா பகுதியில் காணப்பட்டதாக அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
@ap
மேலும், திருடப்பட்ட வாகனம் ஒன்றில் மயில்ஸ் சாண்டர்சன் பயணப்பட்டதாகவும், அந்த வாகனம் புதன்கிழமை பிற்பகல் 2.10 மணியளவில் திருடப்பட்டதாகவும், ஆனால் அவர் பயணத்தின் நோக்கம் தெரியவில்லை எனவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
ஞாயிறன்று முன்னெடுக்கப்பட்ட கொடூர தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 19 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் சகோதரருடன் ஈடுபட்ட மயில்ஸ் சாண்டர்சன் மீது மூன்று பிரிவுகளில் முதல் நிலை கொலை வழக்கு பதியபட்டுள்ளது.
@ap
விசாரணை தொடங்கிய பின்னர் அவர் மீது மேலும் பல பிரிவுகளில் வழக்கு பதியப்பட வாய்ப்புள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.