ஏழை நாடுகளிடமிருந்து தடுப்பூசியை திருடுகிறது... கனடா மீது பகீர் குற்றச்சாட்டு
ஏழை நாடுகளிடமிருந்து தடுப்பூசியை திருடுவதாக கனடா மீது பகீர் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் வெளியிட்ட செய்தி ஒன்றில், அது ஒரு பில்லியன் டோஸ் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியை குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் நாடுகளுக்கு வழங்க இருப்பதாக தெரிவித்திருந்தது.
அத்துடன், கூடுதலாக 100 மில்லியன் டோஸ் தடுப்பூசியை தயாரிக்கக்கோரி பில் கேட்ஸின் தொண்டு நிறுவனம் செப்டம்பர் மாதம் நன்கொடை ஒன்றையும் வழங்கியது.
இந்நிலையில், கனடாவின் பொதுச்சேவை மற்றும் கொள்முதல் துறை அமைச்சரான அனிதா ஆனந்த், கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில், 3.9 மில்லியன் டோஸ்ஆஸ்ட்ராசெனகா/கோவிஷீல்ட் தடுப்பூசி ஜூன் மாதம் 2ஆம திகதிக்குள் கனடாவுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அதில் 2 மில்லியன் டோஸ் இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட்டிலிருந்தும், 1.9 மில்லியன் டோஸ் கோவாக்ஸ் நிறுவனத்திலிருந்தும் வர உள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஆனால், இந்த அறிவிப்பு கனடா மீது பெரும் குற்றச்சாட்டு ஒன்றைக் கொண்டுவந்துள்ளது. தடுப்பூசி கொள்ளையன் போல கனடா செயல்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
Every single one of which is a dose made in India for developing countries, which Canada poached last week because Trudeau bungled our own procurement.
— Amir Attaran (@profamirattaran) February 27, 2021
How many people in other lands will this kill? “Sunny ways” it isn’t. Ashamed to be Canadian today. https://t.co/esfzPL0824
Ottawa பல்கலைக்கழக தொற்றுநோயியல் மற்றும் பொது சுகாதாரத்துறையியல் பேராசிரியரான Amir Attaran, வளரும் நாடுகளிடமிருந்து ட்ரூடோ அரசாங்கம் தடுப்பூசியை திருடுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மற்ற நாடுகளில் இதனால் எத்தனை பேர் கொல்லப்படப்போகிறார்கள் என்று கேள்வி எழுப்புகிறார் அவர்.
பிரிட்டிஷ் கொலம்பியா சிறுவர் நல மருத்துவமனையின் தொற்றுநோயியல் துறை நிபுணரான Dr. Srinivas Murthy, குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் நாடுகளுக்கு வழங்க இருந்த தடுப்பூசியை கனடா கவர்ந்துகொண்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.