கனேடிய மாணவர் விசா உங்களை படிக்க அனுமதிக்காது! Study Permit பற்றி தெரிந்துகொள்ளுங்கள்...
கனடா மாணவர் விசா (Student Visa) உங்கள் வகுப்புகளைத் தொடங்க அனுமதிக்காது.
கனேடிய மாணவர் விசா மற்றும் கனேடிய படிப்பு அனுமதி (Study Permit) என இரண்டு உள்ளன.
கனேடிய மாணவர் விசா உங்களை நாட்டிற்குள் நுழைய மட்டுமே அனுமதிக்கும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். அது உங்களது வகுப்புகளைத் தொடங்க அனுமதிக்காது.
கனேடிய மாணவர் விசா சமீப காலங்களில் மிகவும் விரும்பப்படும் விசாக்களில் ஒன்றாக இருக்கிறது. கனேடிய அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கான வாய்ப்புகள் மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மிகவும் விரும்பத்தக்க இடமாக கனடாவை தேர்ந்தெடுக்க வைக்கிறது.
இதையும் படிங்க: கனடாவில் படிக்கும் இந்தியர்களுக்கு வழங்கப்படும் ஐந்து உதவித்தொகை!
இருப்பினும், கனேடிய மாணவர் விசா உங்களை நாட்டிற்குள் நுழைய மட்டுமே அனுமதிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? இது உங்கள் கல்வி நிறுவனத்தில் வகுப்புகளைத் தொடங்குவதற்கான அனுமதி அட்டை அல்ல.
நீங்கள் கனடாவில் படிக்கவிருக்கும் மாணவராக இருந்தால், படிப்பு அனுமதிக்கும் மாணவர் விசாவிற்கும் உள்ள வித்தியாசம் குறித்து நீங்கள் தெளிவாக தெரிந்துக்கொள்ள வேண்டும்.
எந்தவொரு கனேடிய நிறுவனத்திலும் வகுப்புகளைத் தொடங்க, வெளிநாட்டிலிருந்து வரும் மாணவர், மாணவர் விசாவைத் தவிர படிப்பு அனுமதியையும் பெற வேண்டும்.
Student visa-விற்கும், Study permit-க்கும் உள்ள வேறுபாடு
Student visa என்பது நாட்டிற்குள் நுழைவதற்கான அங்கீகாரம் மற்றும் படிப்பு அனுமதி உங்களுக்கு தங்குவதற்கான அதிகாரத்தை வழங்குகிறது.
Study permit-ல் உங்களின் நோக்கம், அதாவது நீங்கள் வருகைக்கான காரணம், நீங்கள் ஏன் கனடாவில் இருக்கிறீர்கள், நீங்கள் படிக்கும் அல்லது படைக்கவுள்ள படிப்பு நிலை (course level), படிப்பின் காலம் மற்றும் விதிமுறைகளில் ஏதேனும் கட்டுப்பாடுகள் உள்ளதா என்ற அனைத்து விவரங்களும் இருக்கும்.
Student visa-விற்கு தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
நீங்கள் முதலில் ஒரு Study permit-யைப் பெற வேண்டும், இது ஒரு visitor visa அல்லது மின்னணு பயண அங்கீகாரத்துடன் (eTA) உடன் வரும்போது அனுமதிக்கப்படும் - இவை உங்களை நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கும்.