கனடாவுக்கு கல்வி கற்கச் செல்பவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு

Canada Education
By Balamanuvelan Aug 31, 2026 10:30 AM GMT
Report

Canada Study Permit Rules changes from September 1: செப்டம்பர் 1ஆம் திகதி முதல், கனடா கல்வி அனுமதி விதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

கனடாவில் கல்வி கற்க வரும் வெளிநாட்டு மாணவர்கள், தங்கள் சொந்தத் தேவைகளுக்காக கனடாவில் யாரையும் சார்ந்திருக்காமல், தங்களுக்கான தேவைகளை தாங்களே சந்திப்பதற்காக, அவர்கள் தங்கள் வங்கிக்கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகையை வைத்திருப்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும் என்றொரு விதி உண்டு.

இந்நிலையில், அது தொடர்பான விதிகளில், நாளை முதல், அதாவது, 2026ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 1ஆம் திகதி முதல் சில மாற்றங்கள் அமுலுக்கு வருகின்றன.

கல்வி அனுமதி தொடர்பில் சில மாற்றங்கள்

கனடாவில் கல்வி கற்க வரும் வெளிநாட்டு மாணவர்கள், தங்களுக்கான தேவைகளை தாங்களே சந்திப்பதற்காக தங்கள் வங்கிக்கணக்கில் 22,895 டொலர்கள் வைத்திருக்கவேண்டும் என ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. 

கனடாவுக்கு கல்வி கற்கச் செல்பவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு | Canada Study Permit Rules Changes From September 1

தற்போது மீண்டும் அந்த விதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆம், இனி வெளிநாட்டு மாணவர்கள் தங்களுக்கான தேவைகளை தாங்களே சந்திப்பதற்கான தங்கள் வங்கிக்கணக்கில் 23,448 டொலர்கள் வைத்திருக்கவேண்டும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

விடயம் என்னவென்றால், இது மாணவர்கள் கல்வி கற்பது, போக்குவரத்து போன்ற விடயங்களை உள்ளடக்கிய கல்விக் கட்டணம் அல்ல. அது, தனிச் செலவு!

அத்துடன், கனடாவில் கல்வி கற்பதற்காக உரிமம் கோரி விண்ணப்பிக்கும் மாணவர்கள், தங்களுடன் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் எத்தனை பேரை அழைத்துவருகிறார்களோ, அதற்கேற்ப அவர்கள் வங்கிக்கணக்கில் வைத்திருக்கவேண்டிய தொகையும் அதிகரிக்கும். 

மீண்டும் அமெரிக்கப் பொருட்களைப் புறக்கணிக்கத் தொடங்கிய கனேடிய மக்கள்

மீண்டும் அமெரிக்கப் பொருட்களைப் புறக்கணிக்கத் தொடங்கிய கனேடிய மக்கள்

ஒரு மாணவர் தன்னுடன் தன் உறவினர்கள் இரண்டு பேரை கனடாவுக்கு அழைத்துவர விரும்பினால், அவர் தன் வங்கிக்கணக்கில் 29,192 டொலர்கள் வைத்திருக்கவேண்டும்.

மூன்று பேரை அழைத்துவர விரும்பினால், அவர் தன் வங்கிக்கணக்கில் 35,888 டொலர்களும், நான்கு பேரை அழைத்துவர விரும்பினால் தன் வங்கிக்கணக்கில் 43,572 டொலர்களும் வைத்திருக்கவேண்டும்.

இப்படியே இந்த தொகை அதிகரித்துக்கொண்டே செல்லும். அதாவது, ஒரு மாணவர் கனடாவுக்கு கல்வி கற்பதற்காக வந்தால், அவர் கனடாவில் வேலை செய்யாமலே, தனது மற்றும் தன்னுடன் அழைத்துவந்துள்ள குடும்ப உறுப்பினர்களின் செலவுகளை சந்திக்கும் வகையில் தன்னிடம் போதுமான பணம் உள்ளது என்பதை நிரூபித்தாகவேண்டும் என்கிறது, கனடா புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு! 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US