கதவை அடைத்த கனடா... வேறு நாடுகளில் கல்வி கற்க ஆர்வம் காட்டும் சர்வதேச மாணவர்கள்
கனடா அரசு, பிரபலமான மாணவர் விசா ஒன்றை திடீரென நிறுத்தியுள்ள நிலையில், சர்வதேச மாணவர்கள், மாற்று வழிகள் குறித்து யோசிக்கத் துவங்கியுள்ளார்கள்.
கதவை அடைத்த கனடா...
கடந்த சில ஆண்டுகளாகவே புலம்பெயர்தலுக்கெதிராக தொடர்ச்சியாக நடவடிக்கைகள் எடுத்துவரும் கனடா அரசு, சர்வதேச மாணவர்களுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகளை எடுத்துவருகிறது.
அவற்றின் தொடர்ச்சியாக, மாணவர்கள் விரைவாக கல்வி விசா பெற உதவும், Student Direct Stream (SDS) என்னும் திட்டத்தை திடீரென, நவம்பர் மாதம் 8ஆம் திகதியுடன் முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது கனடா.
சர்வதேச மாணவர்கள் விரும்பும் மற்ற நாடுகள்
கனடா சர்வதேச மாணவர்களுக்கு கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ள நிலையில், சர்வதேச மாணவர்கள், மாற்று வழிகள் குறித்து யோசிக்கத் துவங்கியுள்ளார்கள்.
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றிலிருந்து, கனடா, பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் கல்வி கற்பதில், சர்வதேச மாணவர்களுக்கு ஆர்வம் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.
குறிப்பாக, கனடாவில் கல்வி கற்க விருப்பம் தெரிவித்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட மிகவும் குறைந்துள்ளது.
ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்களில், வெறும் 16 சதவிகித மாணவர்கள் மட்டுமே கனடாவில் கல்வி கற்க விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.
விடயம் என்னவென்றால், இது கடந்த ஆண்டைவிட 6 சதவிகிதம் குறைவாகும்.
இந்திய மாணவர்களைப் பொருத்தவரை, அவர்கள் அமெரிக்கா மற்றும் நியூசிலாந்தில் கல்வி கற்பதில் ஆர்வம் காட்டத்துவங்கியுள்ளார்கள்.
அமெரிக்காவில் கல்வி கற்க விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை 4 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதாவது, 23 சதவிகித மாணவர்கள் அமெரிக்காவில் கல்வி கற்க ஆர்வம் காட்டுகிறார்கள்.
அதேபோல, 5 சதவிகிதம் மாணவர்கள் நியூசிலாந்தில் கல்வி கற்க ஆர்வம் காட்டுகிறார்கள்.
இந்த ஆய்வை, International Development Programme (IDP) என்னும் ஆய்வமைப்பு மேற்கொண்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |