கனடா, சுவிஸ் நாட்டில் வேலைவாய்ப்பு: இலங்கையில் பணமோசடியில் ஈடுபட்ட இருவர் கைது
வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக பொய் வாக்குறுதிகளை வழங்கி பண மோசடியில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸாரின் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டனர்.
வெளிநாட்டில் வேலைவாய்ப்பு
கனடா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் வேலை வாங்கித் தருவதாக பொய்யான வாக்குறுதிகளை வழங்கி பல மில்லியன் ரூபா நிதி மோசடி செய்த இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் வரகாபொல மற்றும் களுத்துறை நீதவான் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் சந்தேக நபர்களான பெண் உட்பட இருவர் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பணத்தை இழந்தவர்கள் வழங்க புகார்களுக்கு பிறகு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புலனாய்வு பிரிவினரால் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
பண மோசடி
இவர்கள், கனடாவில் வேலை பெற்றுத் தருவதாகக் தென்னிலங்கை சேர்ந்த 04 பேரிடம் தலா 13 மில்லியன் ரூபாய் வீதம் 52 மில்லியன் ரூபாய் பணத்தை சந்தேக நபர் ஒருவர் பெற்றுக் கொண்டுள்ளார்.

பணம் பெற்ற பிறகும், அவர்கள் வேலைவாய்ப்பு போன்ற முக்கிய வாக்குறுதி நிறைவேற்ற வில்லை.
தைப்போல சுவிட்சர்லாந்தில் வேலை பெற்றுத் தருவதாக 13 மில்லியன் ரூபாய் பணத்தை மோசடி செய்த பெண்ணொருவரும் களுத்துறையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண் கொழும்புவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் வரவேற்பு பிரிவில் பணியாற்றியவர் என தெரியவந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |