திருமணத்திற்கு பெண் தேடிய கனடா வாழ் தமிழர்! கோடிகளை இழந்தது எப்படி? எச்சரிக்கை செய்தி

Police spokesman
By Raju Apr 27, 2022 10:05 AM GMT
Report

இரண்டாம் திருமணத்திற்காக பெண் தேடிய கனடா வாழ் தமிழர் மிகப்பெரிய அளவில் மோசடிக்கு ஆளான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அதன்படி கூகுளில் எடுக்கப்பட்ட பெண்ணின் புகைப்படத்தை பார்த்து தனது வருங்கால மனைவி என கனவு கண்டு கோடிகளை அவர் இழந்துள்ளார். ஈரோடு மாவட்டம் பவானி அருகே ஊஞ்சமரத்தோட்டம் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் 42 வயதான பச்சையப்பன்.

எம்.பி.ஏ பட்டதாரியான இவர் கனடாவில் வசிக்கிறார். இவர், வித்யா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக கடந்த 2020-ஆம் ஆண்டு மனைவியை பிரிந்த பச்சையப்பன் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளார்.

இரண்டாவது திருமணம் செய்து கொள்வதற்காக திருமண தகவல் மையத்தில் பதிவு செய்துள்ளார். விவாகரத்தான பெண் அல்லது கணவரை இழந்த பெண் தேவை என விளம்பரம் செய்துள்ளார்.

திருமணத்திற்கு பெண் தேடிய கனடா வாழ் தமிழர்! கோடிகளை இழந்தது எப்படி? எச்சரிக்கை செய்தி | Canada Tamil Cheated Money Second Marriage

இந்த விளம்பரத்தைப் பார்த்து பச்சையப்பனை தொடர்பு கொண்ட சென்னை பெரம்பூரைச் சேர்ந்த செந்தில் என்பவர் தனது தங்கை ராஜேஸ்வரி கணவரை இழந்தவர் எனவும், அவருக்கு உங்கள் புகைப்படம் மற்றும் விவரங்களை காண்பித்ததில் பிடித்திருப்பதாக கூறியுள்ளார்.

மேலும், தனது தங்கையை திருமணம் செய்து கொள்ளுமாறு பச்சையப்பனிடம் பேசியுள்ளார். இதற்கு சம்மதம் தெரிவித்த பச்சையப்பன் கனடாவில் இருந்து கொண்டே செந்தில் மற்றும் அவரது தங்கை ராஜேஸ்வரியிடமும் செல்போனில் பேசி வந்துள்ளார்.

வீடியோ அழைப்பில் பேச அழைத்த போதெல்லாம் தனது குடும்பத்தினர் கண்டிப்பானவர்கள் என்பதால் வீடியோ அழைப்பு எல்லாம் வேண்டாம் என்று ராஜேஷ்வரி கூறி விடுவார்.

இதற்கிடையே, பச்சையப்பனிடம் பேசிய செந்தில் அவ்வப்போது தனது தங்கையின் தேவைக்கு குடும்பத் தேவைக்கு என பணம் வாங்கி வந்துள்ளார். மேலும், அந்த பெண்ணுக்காக லட்சக்கணக்கான மதிப்புடைய பரிசுப் பொருட்களையும், நகைகளையும் ஓன்லைனில் ஆர்டர் செய்து அனுப்பியுள்ளார்.

அந்தப் பெண்ணை சந்திப்பதற்காக 3.60 லட்சம் மதிப்புடைய விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை வாங்கிக் கொண்டு கடந்த மாதம் 23-ஆம் திகதி சென்னை வந்த பச்சையப்பன், மயிலாப்பூரில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியுள்ளார்.

திருமணத்திற்கு பெண் தேடிய கனடா வாழ் தமிழர்! கோடிகளை இழந்தது எப்படி? எச்சரிக்கை செய்தி | Canada Tamil Cheated Money Second Marriage

செந்திலை தொடர்பு கொண்ட பச்சையப்பன், உங்கள் தங்கையை அழைத்துக்கொண்டு ஹொட்டலுக்கு வருமாறும், அவருக்கு நிறைய பரிசுப் பொருட்களை வாங்கி வந்திருப்பதாகவும் இருவரையும் நேரில் சந்திக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ஆனால் , செந்தில் மட்டும் பச்சையப்பனை சந்திக்கச் சென்றுள்ளார். தனது தங்கைக்கு உடல்நிலை சரியில்லை தற்போது சந்திக்க முடியாது என்றும் பச்சையப்பனிடத்தில் கூறியிருக்கிறார். இதனால், தனது தங்கைக்கு வாங்கி வந்த பரிசுப் பொருட்களை தன்னிடம் கொடுக்குமாறும் கேட்டுள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த பச்சையப்பன், ராஜேஸ்வரியை நேரில் சந்தித்துதான் பரிசுப் பொருட்களை கொடுப்பேன் என திட்டவட்டமாக கூறி விட்டார். தொடர்ந்து, ஆத்திரமடைந்த செந்தில் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி 3.60 லட்சம் மதிப்புடைய நகைகள், செல்போன் போன்றவற்றை பறித்துக் கொண்டு தப்பி சென்றுள்ளார்.

இந்த சம்பவத்தால், அதிர்ச்சிக்குள்ளான பச்சையப்பன் அப்போது புகார் எதுவும் கொடுக்காமல் கனடாவுக்கு சென்று விட்டார். இதற்கிடையில் பச்சையப்பன் குடும்பத்தினரும் அவரது மனைவி வித்யா குடும்பத்தினரும் தம்பதிக்கிடையே பேசி சமரசம் செய்துள்ளனர்.

இதனால், தன் மனைவியுடன் சேர்ந்து வாழ முடிவு செய்து விவாகரத்து வழக்கையும் பச்சையப்பன் வாபஸ் பெற்றுள்ளார். இந்த நிலையில், செந்தில் தனது தங்கையை திருமணம் செய்து வைப்பதாக கூறி தன்னிடம் 1.38 கோடி ரூபாய் பணமும் பொருட்களையும் பறித்துக் கொண்டதாகவும் கடந்த மாதம் சென்னை வந்த போது தன்னிடம் விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை கத்தியை காட்டி மிரட்டி பறித்துக் கொண்டதாக பச்சையப்பன் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் பொலிசார் செந்திலை கைது செய்தனர். விசாரணையில், செந்திலுக்கு கணவரை இழந்த தங்கையே இல்லை என்கிற அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது.

பச்சையப்பனிடம் அவர் அபகரித்துச்சென்ற எலக்ட்ரானிக் பரிசுப்பொருட்களை பொலிசார் மீட்டனர். பச்சையப்பனிடம் மோசடி செய்த பணத்தை மீட்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

கைதாகியுள்ள செந்தில் பிரகாஷ் எம்.பி.ஏ. பட்டதாரி. இவர் பங்குச் சந்தையில் முதலீடு செய்து நிறைய பணத்தை இழந்துவிட்டதாக கூறப்படுகிறது. அதை சரிகட்ட பச்சையப்பனிடம் இந்த நூதன மோசடியில் ஈடுபட்டதாக தெரிகிறது.

செல்போன் பேச்சை கேட்டும், பெண்ணின் புகைப்படத்தை மட்டும் பார்த்தும் உண்மை என்று நம்பி பணத்தை இழந்த இந்த சம்பவத்தை அனைவரும் ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என பொலிசார் எச்சரித்துள்ளனர்.

திருமணத்திற்கு பெண் தேடிய கனடா வாழ் தமிழர்! கோடிகளை இழந்தது எப்படி? எச்சரிக்கை செய்தி | Canada Tamil Cheated Money Second Marriage

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Toronto, Canada

24 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வன்னிவிளாங்குளம், மல்லாவி, வவுனியா, Scarborough, Canada

11 Nov, 2020
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Frauenfeld, Switzerland

12 Oct, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கன்பெறா, Australia, சிட்னி, Australia

11 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, மெல்போன், Australia

12 Nov, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, முல்லைத்தீவு

11 Nov, 2015
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

11 Nov, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Rorschach, Switzerland

06 Nov, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US