உள்நாட்டு பொருட்களை மட்டும் வாங்குங்கள்: ட்ரம்ப் வரிவிதிப்புக்கு கனடா பதிலடி
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், கனடா, மெக்சிகோ முதலான நாடுகள் மீது வரி விதிப்பதிலிருந்து கொஞ்சமும் பின்வாங்குவதுபோல் தெரியவில்லை.
அதேநேரத்தில், கனடாவும், ட்ரம்பின் செயல்களைப் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பதில்லை என முடிவு செய்துள்ளாற்போல் தெரிகிறது.
உள்நாட்டு பொருட்களை மட்டும் வாங்குங்கள்
Now is the time to choose products made right here in Canada.
— Justin Trudeau (@JustinTrudeau) February 2, 2025
Check the labels. Let’s do our part. Wherever we can, choose Canada.
அமெரிக்கா, கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 25 சதவிகித வரி விதிக்க முடிவு செய்துள்ளது.
இந்த வரிகள், நாளை செவ்வாய்க்கிழமை, அதாவது, பிப்ரவரி மாதம் 4ஆம் திகதி அமுலுக்கு வரும் என செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவிகித வரி விதிக்க கனடாவும் முடிவு செய்துள்ளது.
அத்துடன், ஒரு படி மேலே போய், மற்றொரு அதிரடி முடிவையும் எடுக்க கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முடிவு செய்துள்ளார்.
அதாவது, கனேடிய மக்கள், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே வாங்குமாறு ட்ரூடோ அறிவுறுத்தியுள்ளார்.
Never been a better time to switch to Canadian made!
— Sprague Cannery 🇨🇦🇨🇦🇨🇦 (@SpragueFoods) January 29, 2025
🇨🇦🇨🇦🇨🇦🇨🇦🇨🇦 pic.twitter.com/55991Npjnn
ட்ரூடோ மட்டுமின்றி, கனேடிய அரசியல்வாதிகள் பலரும், இப்படி ட்ரம்ப் கனடா பொருட்கள் மீது வரி விதித்துள்ள நேரத்தில், மக்கள் கனடாவில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்க முடிவு செய்யும் நேரம் இது என்னும் ரீதியில் சமூக ஊடகங்களில் செய்திகளை வெளியிட்டுவருகிறார்கள்.
Now, more than ever, it is important to support local and buy Canadian. America is our closest ally, neighbor, and trading partner, but we won’t back down.
— Randeep S. Sarai (@randeepssarai) February 2, 2025
Choose Canadian and check out https://t.co/xtD9lFV8LV for Canadian-made alternatives. 🇨🇦 pic.twitter.com/VPA1cl4hYt
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |