22 மில்லியன் கனேடியர்களுக்கு வரிவிலக்கு அறிவித்த கனடா அரசு
நடுத்தர வர்க்க மக்களுக்கு கனடா அரசு பாரிய வரிச்சலுகையை அறிவித்துள்ளது.
2025 ஜூலை 1 முதல் குறைந்த வரி விகிதத்தை 15 சதவீதத்திலிருந்து இலிருந்து 14 சதவீதமாக குறைக்கப்படுவதாக கனேடிய அரசு அறிவித்துள்ளது..
இதன் மூலம் இரண்டு வருமானம் உள்ள குடும்பங்கள் ஆண்டுக்கு அதிகபட்சம் 840 கனேடிய டொலர் வரை சேமிக்க முடியும்.
இந்த வரிவிலக்கு திட்டம், 2025-26ஆம் ஆண்டில் தொடங்கி 5 ஆண்டுகளில் 27 பில்லியன் டொலர் மதிப்புள்ள வரி சுமையை குறைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
2025-ஆம் ஆண்டுக்கான முழு ஆண்டு வரி விகிதம் 14.5 சதவீதமாக இருக்கும், 2026 முதல் 14 சதவீதமாக நிலைத்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தால், 57,375 டொலருக்கும் குறைவான வருமானம் உள்ளவர்களும், 114,750 டொலர் வரை வருமானம் உள்ளவர்களும் பெரிதும் பயனடைகின்றனர்.
கனடாவில் 1.5 மில்லியனுக்கும் அதிகமாக இந்தியர்கள் வாழ்கின்றனர். இவர்களில் பலர் இத்திட்டத்தின் கீழ் நன்மை பெறவுள்ளனர்.
மேலும், கனடா வருமான வரித்துறை (CRA), 2025 ஜூலை-டிசம்பர் மாதங்களுக்கான புதிய வரி விலக்கு பட்டியலை வெளியிடும். இதன்மூலம் ஊதியத்திலேயே குறைந்த அளவு வரி பிடித்தம் செய்யப்படும். இல்லையெனில், 2025 ஆண்டுக்கான வரி தாக்கல் செய்யும்போது இந்த வரிவிலக்கு அனுபவிக்கப்படலாம்.
மேலும், அமெரிக்காவுடன் ஏற்பட்டுள்ள வரி பிரச்சினைக்கு தீர்வாக, கனடா அரசு வாகன உற்பத்தியாளர்கள், உணவுப் பொருள் பாக்கேஜிங், தேசிய பாதுகாப்பு தொடர்பான அமெரிக்க இறக்குமதிகளுக்கு 6 மாத தற்காலிக வரி விலக்கை அறிவித்துள்ளது.
இது கனடாவில் வாழும் இந்தியர்களுக்கும், தொழில் முனைவோர்களுக்கும் நம்பிக்கை அளிக்கக்கூடிய அறிவிப்பாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Canada tax relief 2025, Canada tax cut for families, CRA new tax rate, Indian immigrants Canada, Canada tariff relief 2025, Canadian business support program, Canada-U.S. tariff dispute, Canada income tax 14 percent, CRA source deductions July 2025, Canada budget middle class